More on this book
Community
Kindle Notes & Highlights
ஆண், பெண் கல்யாண விஷயத்தில் அதாவது, புருஷன் - மனைவி என்ற வாழ்க்கையானது நமது நாட்டில் உள்ள கொடுமையைப்போல் வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்று சொல்லலாம். நமது கல்யாணத் தத்துவம் எல்லாம் சுருக்கமாய்ப் பார்த்தால், பெண்களை ஆண்கள் அடிமையாகக் கொள்வது என்பதைத் தவிர, வேறு ஒன்றுமே அதில் இல்லை. அவ்வடிமைத்தனத்தை மறைத்துப் பெண்களை ஏமாற்றுவதற்கே சடங்கு முதலியவைகள் செய்யப்படுவதோடு, அவ்விதக் கல்யாணத்திற்குத் தெய்வீகக் கல்யாணம் என்பதாக ஒரு அர்த்தமற்ற போலிப் பெயரையும் கொடுத்துப் பெண்களை வஞ்சிக்கின்றோம்.
இக்கொடுமைகள் இனியும் இப்படியே நிலை பெற்று வருமானால், சொற்ப காலத்திற்குள்ளாக அதாவது, ஒரு அரை நூற்றாண்டுக்குள்ளாக கல்யாணச் சடங்கும், சொந்தமும் உலகத்தில் அநேகமாய் மறைந்தே போகும் என்பதை உறுதியாய்ச் சொல்லலாம்.
ஆனால், செங்கற்பட்டுத் தீர்மானத்திற்குப் பிறகு வெளிநாட்டிலும், இந்தியாவிலும் பல இடங்களில் கல்யாண ரத்துச் சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ருசியாவில் கல்யாணமே தினசரி ஒப்பந்தம்போல் பாவிக்கப்பட்டு வருகின்றது. ஜெர்மனியில் புருஷனுக்கும் பெண் சாதிக்கும் இஷ்டமில்லையானால் உடனே காரணம் சொல்லாமலே கல்யாணத்தை ரத்து செய்துகொள்ளலாமென்பதாகச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
சில சமயங்களில் ஒரு பெண்சாதியின் நடவடிக்கையில் சந்தேகத்திற்காகப் பல கொலைகள் நடந்ததாகவும் பார்க்கின்றோம். தெய்வீக சம்பந்தமான கல்யாணங்கள் இப்படி முடிவடைவானேன்? என்பதைப்பற்றித் தெய்வீகத்தில் பிடிவாதமுள்ள எவருக்குமே யோசிக்கப் புத்தியில்லை. பெண்கள் உலகம் முன்னேற்றமடைய வேண்டுமானால் - அவர்களுக்கும் மனிதத் தன்மையும், மனித உரிமையும், சுயமரியாதையும் ஏற்படவேண்டுமானால் - ஆண்களுக்குத் திருப்தியும், இன்பமும், உண்மையான காதலும் ஒழுக்கமும் ஏற்படவேண்டுமானால், கல்யாண ரத்திற்கு இடம் அளிக்கப்படவேண்டியது முக்கியமான காரியமாகும். அப்படி இல்லாதவரை ஆண் - பெண் இருவருக்கும் உண்மை இன்பத்திற்கும் சுதந்திர வாழ்க்கைக்கும்
...more
கல்யாணம் என்பது தெய்வீகமாகவோ, பிரிக்க முடியாததாகவோ உண்மையில் இருக்குமாயின் அதில் இவ்விதக் குறைகளும் குற்றங்களும் ஏற்பட முடியுமா? என்பதை யோசித்தாலே, தெய்வீகம் என்பது முழுப்புரட்டு என்பது எப்படிப்பட்ட மனிதனுக்கும் புரியமாற் போகாது.
நமது நாட்டிலும் மற்ற நாடுகளில் இருப்பது போன்ற கல்யாண ரத்துக்குச் சட்டம் சமீபத்தில் ஏற்படாமல் போகுமாயின், கல்யாண மறுப்புப் பிரச்சாரமும், கல்யாணம் ஆன புருஷர்களுக்கும், பெண்களுக்கும் பலதாரப் பிரச்சாரமும்தான் செய்யவேண்டியது வரும்.
ஏதோ கல்யாணம் என்பதாக ஒன்றைச் செய்துகொண்டோமே, செய்தாய்விட்டதே, அது எப்படி இருந்தாலும் சகித்துக் கொண்டுதானே இருக்கவேண்டும்’’
இந்து மதத்தில் அறுபதாயிரம் பெண்கள் வரையும், இஸ்லாமிய மதத்தில் 4 பெண்கள் வரையிலும், கிறிஸ்தவ மதத்தில் அளவு குறிப்பிடாமல் எவ்வளவு பெண்களை மணம் செய்துகொள்ள நேர்ந்தாலும் அதுவரையிலும் மணம் செய்துகொள்ள இடமிருக்கின்றது.
இந்து மதத்தில் இந்துக் கடவுள்களே பல மணங்கள் செய்துகொண்ட தாகவும் மற்றும் பல வைப்பாட்டிகள் வைத்திருப்பதாகவும் மத ஆதாரங்களில் காணப்படுவதுடன் அந்தக் கடவுள்களை அந்தப்படியே அதாவது பல மனைவிகள், வைப்பாட்டிகள் ஆகியவைகளுடன் தமிழர்கள் - இந்துக்கள் என்பவர்கள் பூசை, கல்யாண உற்சவம் முதலியவைகள் செய்தும் வணங்குகிறார்கள். இஸ்லாமிய மதத்திலும் நாயகம் முகமதுநபி அவர்களே ஏககாலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுடன் இருந்ததாக ஒப்புக்கொள்ளப்படுகின்றது.
பொதுவாக ஒரு மனிதனுக்கு தன் முதல் மனைவி (1) செத்துப்போன காலத்திலும் (2) மற்றொரு கணவனிடம் ஆசை கொண்டு வெளிப்பட்டுவிட்ட காலத்திலும் மறுமணம் செய்துகொள்வதை யாரும் குற்றம் சொல்வதில்லை. அதுபோலவே, (3) தீராத கொடிய வியாதிக் காரியாயிருக்கும் காலத்திலும் மறுமணம் செய்துகொள்வதை யாரும் ஆட்சேபணை செய்வதில்லை. (4) பைத்தியக்காரியாய்ப் புத்தி சுவாதீன மில்லாமற் போய்விட்ட காலத்திலும் யாரும் ஆட்சேபணை செய்வதில்லை.
(5) மனைவி அறியாமையாலோ முரட்டுத்தனமான சுபாவத்தாலோ புருஷனை லட்சியம் செய்யாமல் ஏறுமாறாய் நடந்து கொண்டு வருவதாக வைத்துக்கொள்வோம். (6) புருஷன், பெண்ணின் மனத்திற்குத் திருப்திப்படாததாலோ அல்லது வேறு காரணத்தாலோ, புருஷனிடம் பெண்ணுக்கு அன்பும், ஆசையும், இல்லாமல் வெறுப்பாய் இருப்பதாக வைத்துக்கொள்வோம். (7) மேற்கண்ட குணங்களுடன் அடிக்கடி தாய் வீட்டுக்குப் போய்விடுவதாக வைத்துக் கொள்வோம். (8) புருஷனுடைய கொள்கைக்கு நேர் மாற்றான கொள்கையுடன் புருஷன் மனம் சதா சங்கடப்படும்படி பிடிவாதமாய் நடந்துகொள்ளும் சுபாவமுடையவள் என்று வைத்துக்கொள்வோம். (9) செல்வச் செருக்கால் புருஷனைப்பற்றி லட்சியமோ கவலையோ இல்லாமல்
...more
‘அது சுருதி, யுக்தி, அனுபவம்’ ஆகிய மூன்றிற்கும் பொருத்தமாயிருக்கின்றதா?’
சுயமரியாதை இயக்கத்தில் கல்யாண ரத்து என்பதும் ஒரு திட்டமாகும். அப்படியே செங்கற்பட்டு மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஈரோடு மாநாட்டில் அதற்காக ஒரு சட்டம் செய்ய வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
முதல் மனைவி மணமகனுடன் ஒன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும்போதுகூட, மறுமணம் செய்துகொள்ளப்படுவதையும், சுய மரியாதைக் கொள்கை ஏன் ஆதரிக்கின்றது என்பதைப் பற்றியும் சற்றுக் கவனிப்போம்.
ஆசை என்பது ஜீவ சுபாவமானது. அதை ஏதோ ஒரு நிர்ப்பந்தத்திற்காகத் தடுத்து வைப்பது என்பது ஒரு வகையான அடிமைத்தனமேயாகும். அன்பு, ஆசை ஆகியவை ஏற்படுவது ஜீவனுக்கு இயற்கை சுபாவம் என்றும், அது சுதந்திரமுடையதாயும், உண்மையுடை யதாயும் இருக்கவேண்டும் என்றும், அதை ஒரு இடத்திலாவது, ஒரு அளவிலாவது கட்டுப்படுத்துவது என்பது ஜீவ சுபாவத்திற்கும், இயற்கைத் தத்துவத்திற்கும் மீறினதென்றும் ஒப்புக்கொள்கின்ற மக்கள், அன்பு ஒருவரிடம்தான் இருக்கவேண்டும் என்று சொல்ல முன்வருவது முன்னுக்குப் பின் முரண் என்றே சொல்லுவோம்.
நம்மைப் பொருத்தவரை ஆண்களுக்குச் சொன்ன விஷயங்கள் எல்லாம் பெண்களுக்கும் பொருந்துமென்றும்,
ஆண்களை விபச்சாரர்கள் என்று வைக்கின்ற வழக்கமும் கிடையாது.
சில இடங்களில் விபச்சாரம் ஆண்களுக்குத் தற்பெருமை யாகவும், கீர்த்தியாகவும்கூட இருக்கிறதைப் பார்க்கின்றோம். சில ஆண்கள் அதைப் பெருமையாய்ச் சொல்லிக் கொள்ளுவதையும் கேட்கின்றோம்.
மக்களும் விபச்சாரி மகன் என்று சொன்னால்தான் கோபித்துக் கொள்கின்றார்களே தவிர, விபச்சாரகனுடைய மகன் என்று சொன்னால் கோபித்துக் கொள்ளுகின்றவர்கள் இல்லை.
எப்படிக் கற்பு என்ற வார்த்தையும், அதைப் பயன்படுத்தும் முறையும் புரட்டானது என்றும், பெண்ணடிமை கொள்ள உத்தேசித்து ஏற்படுத்தியதாகுமென்றும் சொல்லுகின்றோமே, அதுபோலவே விபச்சாரமென்னும் வார்த்தையும் அதன் பிரயோகமும் புரட்டானதும் பெண்களை அடிமை கொள்வதற்கென்றே ஏற்படுத்தப்பட்டதென்றும் காணப்படுவதோடு, அது முக்கியமாய் இயற்கைக்கு விரோதமான தென்றும்கூட விளங்கும்.
சாதாரணமாகவே இன்றைய கற்பு, விபச்சாரம் என்னும் வார்த்தைகள் சுதந்திரமும், சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்குச் சிறிதும் தேவை யில்லாததேயாகும்.
மலையாள நாட்டில் இரண்டு மூன்று ஆண்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்படுத்திக் கொள்ளுகின்ற வழக்கம் உண்டு.
சில வகுப்புகளில் தங்கள் இனத்தார் தவிர, மற்ற இனத்தாரிடம் சாவகாசம் செய்தால் மாத்திரம் விபச்சாரமாய்க் கருதப்படுகின்றது. நமது நாட்டிலும் சில வகுப்புகளிலுள்ள குடும்பத்தைச் சேர்ந்த மச்சாண்டார், கொழுந்தனார் (அதாவது புருஷன் சகோதரர்கள்) மாமனார் ஆகியவர்கள் சம்பந்தமானது விபச்சாரத்தனமாக கொள்ளப்படுவதில்லை. இக் கொள்கைகள் நம் நாட்டுப் பழங்குடி மக்கள் மிகுதியும் கொண்ட சில சமூகங்களின் பழக்க வழக்கங்களுடன் கலந்து செல்வாக்குப் பெற்றிருப்பதை இன்றும் தாரளமாய்ப் பார்க்கலாம்.
மனித சமூகத்திற்கென்று பொதுவாகச் சில கட்டுப்பாடுகளும் ஒழுங்கும் வாழ்க்கைக்கு ஏற்பட்டிருக்கவேண்டும் என்பதை நாம் அடியோடு ஆட்சேபிக்க வரவில்லை.
நியாயமான என்றதனாலேயே எது நியாயம் என்பதற்கு ‘‘தர்ம சாஸ்திரங்களை’’த் தேட வேண்டுமென்பது கருத்தல்ல. மற்றபடி கண்டுபிடிப்பதென்றால், ஒருவன் தனக்கு நியாயம் என்று சொல்லுவதானது பிறத்தியானும் அதையே தனக்கும் நியாயமென்று சொன்னால், அவன் - முதலில் சொன்னவன் ஒப்புக்கொள்கின்றானா என்று பார்த்து நிர்ணயிப்பதேயாகும். அதாவது இருவருக்கும் ஒருப்போன்றதும், அன்றியும் அறிவிற்கும், சாத்தியத்திற்கும், அனுபவத் திற்கும் ஏற்றதாகவும் அவசியம் கொண்டதாகவும் இருக்கவேண்டும்.
தந்திரக்காரர்கள் தங்களுக்குத் தோன்றினபடிக்கெல்லாம் கட்டுப்பாடுகள் செய்துகொண்டு போவதானது எவ்விதப் பயனையும் தராததோடு, மனித சமூகத்திற்கு வீண் கஷ்டத்தை உண்டாக்கி வருவதோடு, அது வெறும் அடிமைத்தனத்தையும், அறிவுத் தடையையும்தான் உண்டாக்கும்.
உலகில் பொருளியல் சமத்துவம் ஏற்படுகின்றவரை திருட்டு என்னும் குணமானது குற்றமாகத்தான் பாவிக்கப்படும். உலகிலுள்ள எல்லாச் சொத்தும் உலகத்திலுள்ள எல்லோருக்கும் சொந்தம்; ஒவ்வொருவனும் பாடுபட்டுத்தான் சாப்பிடவேண்டும்; தேவைக்குமேல் எவனும் வைத்துக் கொள்ளக்கூடாது - போன்ற கொள்கைகள் ஏற்பட்டுவிட்டால், திருட்டுப் போவதும், திருட்டுப் போனதைப்பற்றிக் கவலைப்படுவதும் தானாகவே மறைந்துவிடும். ஆனால், இப்போது நான் திருடுவது குற்றமல்ல, நீ பொய் சொல்வதுதான் குற்றம்; நான் விபச்சாரம் செய்வது குற்றமல்ல, நீ விபச்சாரம் செய்வது குற்றமல்ல, நீ விபச்சாரம் செய்வதுதான் குற்றம் என்பது போன்றதான ‘‘பொது ஒழுக்கங்கள்’ என்பவைகளும் ‘‘பொதுக்
...more
இன்று உலகத்தில் சிறப்பாக நமது நாட்டில் இருந்துவரும் ஒழுக்கம், கட்டுப்பாடு, தர்மம் முதலியவைகள் எல்லாம் பெரிதும் இயற்கைக்கு எதிரியாகவும், அடிமைத்தனத்திற்கு ஆதரவாகவும், தனிப்பட்டவர்கள் சுயநலத்திற்கேற்ற சூழ்ச்சியாகவும் செய்யப்பட்டவைகளாகவே இருக்கின்றன.
சிந்தனை உணர்ச்சியும், இந்திரியச் செயலும், ஆசையுமேயாகும்.
உணர்ச்சியின் காரணமாய்ப் பசி, நித்திரை, புணர்ச்சி மூன்றும் முக்கியமான, இன்றி யமையாத இயற்கை அனுபவமாய்க் காண்கின்றோம்.
பஞ்சேந்திரியங்களின் அதாவது, மெய், வாய், கண...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
பொய் சொல்லக்கூடாது என்று வாயால் சொல்லி விடுகின்றோம். பொய்ச் சொல்லுவதையும், ஒழுக்கக் குறைவென்று சொல்லிவிடுகின்றோம். ஆனால், தொழிற்முறைக்காகப் பொய்யை அவசியமாக வைத்து, அதனால் பிறருக்குக் கஷ்டத்தையும், நஷ்டத்தையும் கொடுத்து வரும் வக்கீல்களையும், வியாபாரிகளையும் மனித சமூகத்தில் எவ்வித இழிவுமின்றி ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். அத்தொழிலில் சம்பாதித்த செல்வத்தைக் கொண்டும், பெருமையைக் கொண்டும் அம்மக்களைக் கவுரவமாகவே மதிக்கின்றோம். ஆனால், அதுபோலவே, நடக்கும் மற்றொரு தொழிற்காரரை உதாரணமாக, தேவதாசிகள் போன்றவர்களை இழிவாகக் கருதுகின்றோம். பொதுவாக, இம்மூன்று பேர்களாலும் மனித சமூகங்களுக்குக் கெடுதியும், நஷ்டமும்
...more
மற்றவர்களுக்குக் கெடுதியைக் கொடுக்கும் தொழில் எதுவானாலும் அப்படிப்பட்ட தொழில் இல்லாமலே உலகம் நடக்கும் படியாகத்தான் பார்க்கவேண்டும். இப்படிப்பட்ட விஷயத்தில் மாத்திரம் வேண்டுமானால், இயற்கையை மாற்றிக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவது அவசியமாகலாம்.
இந்திய நாட்டின் ஆட்சி உரிமை இந்திய மக்களுக்கே கிடைக்க வேண்டுமென அரசியல் சீர்திருத்தக்காரர்களும், இந்திய மக்களுக்குள்ளிருக்கும் வகுப்புப் பிரிவினையும், சாதி வேற்றுமையும் ஒழிய வேண்டுமென்று சமூகச் சீர்திருத்தக்காரர்களும் போராடுகிறார்களேயன்றி, மக்கள் கூட்டத்தில் ஒரு பகுதியராகிய பெண்கள் ஒரு பக்கம் அழுத்தப்பட்டு வருவதைப்பற்றி எவருமே போதிய கவலை கொள்வதாகக் காணோம்.
ஆடவரிலும் சரி, பெண்டிரிலும் சரி, முறையே அறிவாளிகளும், ஆண்மையுடையோரும், அறிவிலிகளும், பேடிகளும் உண்டு. இவ்வாறிருக்கத் திமிர் படைத்த ஆணுலகம் பெண்ணுலகத்தைத் தாழ்த்தி, இழித்து, அடிமைப்படுத்தி வருத்துதல் முறைமையும் நியாயமுமாகுமா?
உலக இன்பத்தை நுகர்ந்து அலுத்துப் போயிருக்கும் பழுத்த கிழவனாயினும், தம் மனைவியார் இறந்து பட்டவுடன் மறுமணம் புரிய முயலுகின்றான். அதுவும் தக்க பருவமும், எழிலும் பொருந்திய இளங் கன்னியர்களைத் தன் துணைவியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். ஆனால், ஓர் பெண்மகள் கொழுநன் இழந்துவிட்டால் பதினாறு வயதுக் கட்டழகியேயாயினும், உலக இன்பத்தைச் சுவைத்தறியாத வனிதா ரத்னமாயினும் தன் ஆயுள்காலம் முழுவதும் அந்தோ! தன் இயற்கைக்கட்புலனை வலிய அடக்கிக் கொண்டு, மனம் நைந்து, வருந்தி மடியும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வருவது என்னே அநியாயம் இது!! இந்து சமயத்தார் என்று கூறப்படுபவர்கள் இவ்வாறு தங்கள் சமூகம் அநியாயமாய் அழிந்துவருவதைப்
...more
உடன்கட்டை ஏறுவது ஒருநாள் துன்பம்; விதவையாய் வாழ்வதோ வாழ்நாள் முழுதும் தாங்க முடியாச் சித்திரவதைக் கொப்பான துன்பமாக இருந்து வருகிறது.
மறுமணம் செய்துகொள்ள விரும்பாத கைம்பெண்கள் இருந்தால் இருக்கட்டும்.
நான் கர்நாடக பலிஜநாயுடு வகுப்பில் பிறந்தவன். எனது வகுப்பார் பெண் மக்கள் முக்காட்டுடன் கோஷாவாக இருக்கவேண்டியவர்களெனவும், விதவா விவாகத்தை அனுமதிக்கப்படாத வகுப்பினரெனும் வழங்கப் படுபவர்கள். நான் பிறந்த குடும்பமோ அளவுக்கு மிஞ்சிய ஆசாரத்தையும், வைணவ சம்பிரதாயத்தையும் கடுமையாய் ஆசாரத்தையும், வைணவ சம்பிரதாயத்தையும் கடுமையாய் ஆதரிக்கும் குடும்பம். இப்படி இருந்தபோதிலும் என்னுடைய 7-ஆவது வயதிலிருந்தே மக்களில் உயர்வு தாழ்வு கற்பித்தலையும், ஒருவர் தொட்டதை மற்றொருவர் சாப்பிடலாகாதெனச் சொல்வதையும் நான் பரிகாசம் செய்து வந்ததோடு, எவரையும் தொடுவதற்கும், எவர் தொட்டதையும் சாப்பிடுவதற்கும் நான் சிறிதும் பின்
...more
இஃதிவ்வாறிருக்க என் தங்கை தனது இளம் வயதிலேயே ஓர் பெண் குழந்தையையும், ஓர் ஆண் குழந்தையையும் விடுத்து இறந்துவிட்டார்.
மாமா, எனக்குக் கல்யாணம் செய்து வை என்று நான் உன்னைக் கேட்டேனா? இப்படி என் தலையில் கல்லைப் போட்டாயே’’
முடிவில் என் மைத்துனரின் இரண்டாவது மனைவியின் சகோதரரைப் பிடித்துச் சரி செய்து எவரும் அறியாவண்ணம் பெண்ணையும், மாப்பிள்ளையையும், மாப்பிள்ளையைச் சென்னை வழியாகவும், பெண்ணைத் திருச்சி வழியாகவும் சிதம்பரத்திற்கு அழைத்துச் சென்று அங்குக் கோயிலில் கல்யாணம் செய்வித்து, ஊருக்கு அழைத்துவரச் செய்தேன்.
விதவைகளின் விஷயம் எனது நினைவிற்கு வரும்பொழுதும் - நேரில் காண நேரும்பொழுதும், ‘‘இது உலக இயற்கை அல்ல, எளியாரை வலியார் அடக்கி ஆண்டு இம்சிப்பதேயாகும்’’ என்றே முடிவு செய்வேன்.
பொதுவாய் விதவைத் தன்மை நிலைத்திருக்கும் காரணத்தினாலேயே இந்து சமூகம் ஒரு காலத்தில் அடியோடு அழிந்து போனாலும் போகுமென்பதே எனது முடிவான கருத்து.
உலகில், மனித வர்க்கத்தினருக்குள்ளிருக்கும் அடிமைத்தன்மை ஒழியவேண்டுமானால், பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் அழியவேண்டும். அது அழிந்த நிலையே சமத்துவம், சுதந்திரம் என்னும் முளை முளைக்கும் இடமாம். இதற்கு விதவைகளுக்கு மறுமணம் செய்துகொள்ள உரிமை ஏற்படுத்துவதே முதல் காரியமாகும். தேசிய சர்வாதிகாரியும், வர்ணாசிரமப் பித்தும், பழைமைப்பற்றும் மிக்குடைய தோழர் காந்தியும் இந்து விதவைகளைப்பற்றி அநேக இடங்களில் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். அவற்றுள் 1925 ஆம் வருடத்தின் ‘‘நவஜீவன்’’ பத்திரிகையைப் படித்தால் உண்மை புலனாகும். அக்கட்டுரையின் சில பாகமாவது: ‘‘பால்ய விதவைகளைக்
...more
1921 ஆம் வருஷத்திய ஜனசங்கியைப்படி இந்துக் கைம்பெண்ணின் தொகையினை நோக்குகையில் அய்யகோ! என் நெஞ்சம் துடிக்கின்றது!
இந்து மதத்திலிருந்து எவரேனும் இரண்டொருவர் பிற மதத்திற்கு மாற்றப்பட்டால், இந்து மக்கள் தங்கட்குப் பெரும் துன்பம் நேரிட்டுவிட்டதாகக் கருதி பரிதாப்படுகின்றார்கள்.
இரண்டு நபருக்காக இவ்வளவு துக்கமும் துயரமும் ஏற்படுமானால் தற்காலம் நமது இந்திய நாட்டிலள்ள இருபத்தாறு லட்சத்து முப்போத்தோராயிரத்து எழுநூற்று எண்பத்தெட்டு விதவைகள் (இப்போது சுமார் 5 லட்சம் அதிகம் பெருகியிருப்பர்) கல்யாணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கை நடத்துவதாயிருந்தால் எத்தனை குழந்தைகள் பெறக்கூடும்? சராசரி மொத்தத்தில் மூன்றில் இருமடங்குப் பெண்கள் 2 வருடத்திற்கு ஒரு குழந்தை வீதம் பெறுவதாக வைத்துக் கொண்டாலும், தடவை ஒன்றுக்கு 87,726 குழந்தைகள் வீதம் வருடம் பத்துக்கு 4,38,631 பிரஜா உற்பத்தியை நாம் தடுத்துக்கொண்டு வருகின்றோம். இது இரண்டொருவர் மதம் மாறுவதால் நஷ்டம் வந்துவட்டதாகக் கருதுவோருக்குப்
...more
விதவைகளின் கொடுமையை நீக்க ஒரு நூறு வருடங்களாக இராஜாராம் மோகன்ராய், ஈஸ்வரசந்திர வித்தியாசாகரர், கோலாப்பூர் மகாராஜா, சுரேந்திரநாத் பானர்ஜி, விரேசலிங்கம் பந்துலு, மகாதேவ கோவிந்த ரானடே, வேமண்ணா, சர் கங்காராம் முதலிய அறிஞர்கள் பாடுபட்டுழைத்தனர். இதுபோழ்தும் இத்தகைய சீர்திருத்தத் துறையில் பல பாஞ்சாலத் தலைவர்கள் இறங்கி உழைத்து வருகின்றனர்.

