More on this book
Community
Kindle Notes & Highlights
பெண்களை, ‘‘சூத்திரர்’’களான நாலாஞ் சாதியினரைவிடக் கீழாக மதிக்க வேண்டியவர்கள் என்கின்றது மனுதர்மம்!
ரசல் அவர்களது, “Marriages and Morals” - ‘‘திருமணங்களும், ஒழுக்கமும்’’ என்ற நூல் எவ்வளவு பெரியதொரு புரட்சியை உண்டாக்கியதோ, அதைவிடப் பெரும் புரட்சிக்குரிய நூலாகும் இந்நூல்!
பல சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டவைகளைத் திரட்டி வெளியிடுவதாகும்.
நீதி நூல்கள் என்பவைகள் எப்படிப்பட்ட பெரியோர்களால் எழுதப்பட்டவைகள் என்றாலும் அவை அக்கால நிலையையும், எழுதப்பட்ட கூட்டத்தின் சவுகரியங்களையும் அனுசரித்து எழுதப்பட்டதென்றும், மற்றும் ஒரு நீதியானது எக்காலத்தும் எல்லாத் தேசத்திற்கும், எல்லாக் கூட்டத்தாருக்கும் சவுகரியமாகவும், பொதுவாயும் இருக்கும்படியாக எழுத முடியாதென்றும், ஆதலால் எந்தக் கொள்கையும் எக்காலத்தும், எல்லாத் தேசத்திற்கும், எல்லோருக்கும் சவுகரியமாயிருக்குமென்றும் கருதி, கண்மூடித்தனமாய், குரங்குப் பிடிவாதமாய்ப் பின்பற்றக் கூடாது என்றும் வலியுறுத்த எழுதப்பட்டதாகும்.
ஒரு தடவை காதல் என்பது ஏற்பட்டுவிட்டால், எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறகு அதை மாற்றிக் கொள்ளக் கூடாதென்றும் சொல்லப்படும் நிர்ப்பந்தக் காதலைப் பொய்யென்று எடுத்துக்காட்டவும்,
இருபாலார்களுடைய வாழ்க்கைச் சவுகரியத்திற்கு ஒத்துவரவில்லையானால், ரத்து செய்துவிடத் தக்கதே
கற்பு என்ற வார்த்தையைப் பகுபதமாக்கிப் பார்ப்போமானால், கல் என்பதிலிருந்து வந்ததாகவும், அதாவது படி - படிப்பு என்பதுபோல் கல் - கற்பு என்கின்ற இலக்கணம் சொல்லப்பட்டு வருகிறது.
கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை!’’ என்கிற வாக்கியப்படி பார்த்தால் கற்பு என்பது சொல் தவறாமை; அதாவது, நாணயம், சத்தியம், ஒப்பந்தத்திற்கு விரோதமில்லாமல் என்கின்றதான கருத்துகள் கொண்டதாக இருக்கிறது.
தலைவி என்ற பதத்திற்கும், நாயகி என்ற பதத்திற்கும் மனைவி என்று பொருள் குறிக்கப்பட்டிருப்பதாலும், அது அன்பு கொண்ட நிலையில் மாத்திரம் ஆணையும், பெண்ணையும் குறிக்கின்றதேயொழிய, வாழ்க்கையில் கட்டுப்பட்ட பெண்களுக்குத் தலைவி என்கின்ற வார்த்தை, அதன் உண்மைக் கருத்துடன் வழங்கப்படுவதில்லை. நாயகன் - நாயகி என்கின்ற சமத்துவமுள்ள பதங்களும், கதைகளிலும், புராணங்களிலும் ஆண் - பெண் இச்சைகளை உணர்த்தும் நிலைகளுக்கே மிகுதியும் வழங்கப்படுகின்றன. ஆகவே, காமத்தையும், அன்பையும் குறிக்குங் காலங்களில் சமத்துவப் பொருள் கொண்ட நாயகர் - நாயகி, தலைவர் - தலைவி என்ற வார்த்தைகளை உபயோகித்துவிட்டு, கற்பு என்ற நிலைக்கு வரும்போது அதைப்
...more
குறளில் வாழ்க்கைத் துணை நலத்தைப்பற்றிச் சொல்ல வந்த 6-ஆம் அத்தியாயத்திலும், பெண் வழிச் சேரல் என்பதைப்பற்றிச் சொல்லவந்த 9-ஆவது அத்தியாயத்திலும், மற்றும் சில தனி இடங்களிலும் பெண்கள் விஷயத்தில் மிக்க அடிமைத் தன்மையையும், தாழ்ந்த தன்மையையும் புகுத்தப்பட்டிருப்பதாகவே எண்ணக் கிடக்கின்றன. தெய்வத்தைத் தொழாமல் தன் கொழுநனாகிய தன் தலைவனைத் தொழுகின்றவள் மழையைப் பெய்யென்றால் பெய்யும் என்றும்; தன்னைக் கொண்டவன் என்றும் இம்மாதிரியான பல அடிமைக்குகந்த கருத்துகள் கொண்ட வாசகங்கள் காணப்படுகின்றன. இவ்விஷயத்தில் மாறுபட்ட அபிப்பிராயம் கொள்ளுவோர் மேற்கண்ட இரண்டு அத்தியாயங்களையும் 20 குறளையும் உரைகளைக் கவனியாமல் மூலத்தை
...more
திருவள்ளுவர் ஒரு ஆணாயில்லாமல் பெண்ணாயிருந்து இக்குறள் எழுதியிருப்பாரானால் இம்மாதிரிக் கருத்துகளைக் காட்டியிருப்பாரா?
கற்பு என்பதற்கு, ‘‘பதிவிரதம்’’ என்கின்ற கருத்தை
இந்த விஷயத்தில் உலகத்தில் ரஷ்யா தவிர, வேறு நாடோ, வேறு மதமோ, வேறு சமூகமோ யோக்கியமாய் நடந்து கொண்டிருக்கிறது எனச் சொல்ல முடியாது.
இந்நிலை சட்டத்தாலும், மதத்தாலும் மாத்திரம் ஏற்பட்டதென்று சொல்வதற்கில்லாமல் பெண் சமூகமும், ஒப்புக்கொண்டு, இந்நிலைக்கு உதவி புரிந்து வருவதானாலும் இது உரம் பெற்று வருகிறதென்றே சொல்லவேண்டும். அநேக வருட பழக்கங்களால் தாழ்ந்த சாதியார் எனப்படுவோர் எப்படித் தாங்கள் தாழ்ந்த வகுப்பார் என்பதையும் ஒப்புக்கொண்டு, தாமாகவே கீழ்ப்படியவும், ஒடுங்கவும், விலங்கவும் முந்துகின்றார்களோ, அதுபோலவே, பெண் மக்களும் தாங்கள் ஆண் மக்களின் சொத்துகளென்றும், ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்களென்றும், அவர்களது கோபத்திற்கு ஆளாகக் கூடாதவர்கள் என்றும் நினைத்துக் கொண்டு, சுதந்திரத்தில் கவலையற்று இருக்கின்றார்கள். உண்மையாக, பெண்கள்
...more
கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற கொடுமையான மதங்கள், சட்டங்கள் மாயவேண்டும்.
கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக்கொண்டு, காதலும், அன்பும் இல்லாதவனுடன் இருக்கவேண்டும் என்கின்...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
எந்தக் காலகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்கின்ற கூட்டம் ஏற்பட்டதோ, எந்தக் காலத்தில் எந்தக் கூட்டத்தார்கள் தாழ்த்தப்பட்டோருக்கு அறிவு வளர்ச்சிக்குரிய சாதனங்கள் இல்லாமல் செய்தனரோ அக்காலத்திலேயே அந்தக் கூட்டத்தாராலேயே பெண் மக்களுக்கும் அறிவு வளர்ச்சிக்குரிய சாதனங்கள் இல்லாமல் செய்யப்பட்டு, தாழ்த்தி அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
பெண்களின் அறிவுத் திறத்திற்கு உதாரணமாக இவர் ஒரு அவ்வைப்பிராட்டியை எடுத்துக்காட்டுகின்றார். அதே மூச்சில் திருவள்ளுவரையும் எடுத்துக்காட்டியிருப்பாரானால், தாழ்த்தப்பட்டவர் களுக்குள்ளும் ஏதோ ஒருவருக்கு அறிவு வளர்ச்சி இருந்து வந்தது என்பதை ஒத்துக்கொண்டிருப்பார். எனவே, நாம் ஒன்றிரண்டு பெண்ணரசிகளைப் பற்றிப் பேச வரவில்லை என்பதையும் தற்காலத்தில் வாழும் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பதே முக்காலே மூன்று வீசம் வீதமுள்ள பெண்களைப்பற்றிப் பேசுகின்றோம் என்பதையும் உணர வேண்டுகின்றோம்.
அவ்வையாரின் ‘தையல் சொற்கேளேல்’
வள்ளுவரின் ‘‘பெண் வழிச் சேரல்’’
பேதமை என்பது மாதர்க்கணிகலம்’’
முதலாவது அவ்வையும், வள்ளுவரும் சகோதரர்கள் என்பது ஒரு கதை. ஆதி என்கின்ற புலைச்சிக்கும், பகவன் என்கின்ற பார்ப்பானுக்கும் பிறந்த பிள்ளைகள் ஏழில் இவர்கள் இருவர் என்று அக்கதையே சொல்லுகின்றது.
ஆதிக்கும், பகவனுக்கும் புணர்ச்சி முடிந்ததும் பிள்ளை பிறந்ததாகவும், அதை அங்கேயே போட்டுவிட்டுப் போய்விட்ட தாகவும் அக்கதை கூறுகின்றது. இது சம்பந்தமாக மற்றும் பலப்பல கதைகளும் உண்டு. அன்றியும், மற்றும் பலப் பல அவ்வைகள் இருந்தார்கள் என்றும் சிலர் கூறுவார்கள்.
இவ்வளவு உயர்ந்த தத்துவங்களைக் கொண்ட நீதிகளை உணர்ந்தவர்கள், இவ்வளவு பெரிய பிழைகளை இழைத்திருப்பார்களா? என்னும் விஷயமாகும். ஆனால், எல்லா விஷயங்களுக்கும் இவ்வாயுதத்தை உபயோகிக்க முற்படுவதால், அவ்வாயுதம் சில சமயங்களில் உபயோகிப்பவர்களையே மோசம் செய்துவிடக் கூடும். அல்லாமலும், காலதேச வர்த்தமானத்தைக் கொண்டுதான் யாரும் எதையும் சொல்லியிருக்க முடியுமேயல்லாமல், பார்ப்பனர்கள் சொல்வதுபோல் எதையும் கடவுள் சொன்னார் என்பதும், அது எக்காலத்திற்கும் ஏற்றது என்பதும், இக்காலத்திற்குப் பொருத்தமற்றதாகும். இவ்விரு பெரியார்களும், உண்மையாயிருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்நீதி நூல்கள் சொல்லப்பட்ட காலம் ஆரிய ஆதிக்கம்
...more
அக்காலத்திய நிலைமைக்கு யாராயிருந்தாலும் நீதி இப்படித்தான் சொல்லி இருக்க முடியும் என்கின்ற முடிவு காணலாம். எப்படியென்றால், ‘‘கம்பர்’’ அறிவுத் திறமுடைய கவி என்பதில் யாருக்கும் வேறுபாடு இராது. ஆனாலும், அப்படிப்பட்ட கம்பர் ராமாயணம் பாடினார் என்றால், ஆரியர் செல்வாக்குக் காலத்தில், ஆரிய ஆதிக்கத்தில் மக்களுக்கு உணர்ச்சி உள்ள காலத்தில் பாடியதானதால், அதில் வான்மீகி உரைத்த கருத்துகளை மாற்றி அதிலுள்ள ஆபாசங்களை எல்லாம் நீக்கி, ஆரியர்களுக்கு முழு உயர்வையும், ஆதிக்கத்தையும் வைத்து மக்கள் கொண்டாடும்படியாகப் பாடியிருக்கின்றார். அதுபோலவே, இப்பொழுதும்கூட எவ்வளவு அறிவு முதிர்ச்சியும், ஆராய்ச்சி முதிர்ச்சியும் பல
...more
ஆதலால், அவர்கள் பரிசுத்தத் தன்மையும், மேன்மையும் உற்றவர்களானால், அக்காலத்திற்கேற்ப கூறினார் என்பதோடு முடித்து விடுவதே நன்று. அப்படி இல்லாமல், எக்காலத்திற்கும் ஏற்றதென்போமாயின் அவைகள் குற்றம் குற்றமே, ‘நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே’தான்.
வேறொன்று விரித்தல்
‘உள்ளதை விரிக்கப் பயந்து மறைத்தல்’
ஆணின் தன்மை வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் கொண்டு விளங்குகிறது’’ என்றும், ‘‘பெண்ணின் தன்மை அன்பு, மேன்மை, சாந்தம், பேணுந்திறம் கொண்டு விளங்குகிறது’’
வன்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது - வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் புலிக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்த மென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை. நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில், ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண் மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.
இருபாலாருக்கும் சமமாகவே இருக்க இயற்கையில் இடமும் இருக்கின்றது. ஆனால், அது செயற்கையால் - ஆண்களின் சுயநலத்தால் - சூழ்ச்சியால் மாறுபட்டு வருகின்றது.
கர்ப்பமாக பத்து மாதம் சுமந்து பிள்ளை பெறுகின்ற குணம் பெண்களுக்கு இருப்பதாலேயே பெண்கள் நிலை ஆண்களைவிட எந்தவிதத்திலும் அதாவது, வீரம், கோபம், ஆளுந்திறம், வன்மை முதலியவைகளில் மாறுபட்டுவிட வேண்டியதில்லை என்றே சொல்வோம். கர்ப்பம் தரித்து பிள்ளை பெறாத காரணத்தாலேயே ஆண் மக்களுக்கு அன்பும், சாந்தமும், பேணுந்திறமும் பெண்களைவிட மாறுபட்டதாகி விடாதென்றும் சொல்லுவோம். உண்மையான சமத்துவத்திற்கு மதிப்புக் கொடுப்போமானால், உண்மையான அன்பு இருக்குமானால், பிள்ளையைச் சுமந்து பெறும் வேலை ஒன்று தவிர, மற்ற காரியங்கள் இருபாலாருக்கும் ஒன்றுபோலவே இருக்கும் என்பது உறுதி.
‘தற்கொண்டாள்’ என்பதற்கு அன்பைக் கொண்டவள் என்கின்ற பொருளை வருவித்துக் கொள்வது இங்கு வள்ளுவருக்குக் காப்புச் செய்யக் கருதியதாகுமே...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
பெண்ணைக் கொள்ள ஆணுக்கு உரிமையிருந்தால், ஆணைக் கொள்ளப் பெண்ணுக்கு உரிமை வேண்டும். ஆணைத் தொழுதெழ வேண்டும் என்று பெண்ணுக்கு நிபந்தனையிருந்தால், பெண்ணையும் ஆண் தொழுதெழ வேண்டும். இதுதான் ஆண் - பெண் சரி சம உரிமை என்பது.
குறளில் ஆண்களுக்கும் வள்ளுவர் கற்பு கூறியிருப்பதாகச் சொல்லுகின்றார். இருக்கலாமானாலும், பெண்களுக்குக் கூறியதுபோல் இல்லையென்றுதான் சொல்கிறோம்.
சிறை காக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறை காக்கும் காப்பே தலை’’ ‘‘நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள்’’
இவைகள் அதற்காகக் கூறியதல்ல என்பது நமது அபிப்பிராயம். அதாவது முதற் குறளுக்கு ‘‘காவலினால் பெண்கள் கற்பாயிருப்பதால் பயனில்லை; பெண்கள் தாங்களாகவே கற்பாயிருக்கவேண்டும்’’ என்பதுதான் கருத்தாக இருக்கலாம் என்று கருதுகிறோம். இரண்டாவது குறள், விலைமாதரைப் புணர்கின்றவர்க்குக் கூறிய பழிப்புரையேயல்லாமல் காதல் கொண்ட மற்றப் பெண்களைக் கூடித்திரியும் ஆண்களைக் குறித்துக் கூறியதல்லவென்பது நமதபிப்பிராயம்.
இருபாலாருக்கும் சம நிபந்தனை குறளில் இல்லை என்பதற்கு மற்றும் பல குறள்களையும் நாம் கூறக்கூடும்.
குறள் விஷயத்திலும், குறளாசிரியர் விஷயத்திலும் நாம் கொண்டுள்ள பக்தி நமது தோழர் கொண்டுள்ள பக்திக்கு மீறியதல்ல வானாலும் குறைந்ததல்ல என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
பெரும்பான்மை மக்களது கருத்துக்கு மாறுபடுவதும் பெரியோரிடம் குறை காணுவதும் மடமை என்கின்ற பொருள் கொண்ட வேறு இரண்டு குறள்பற்றி நாம் சிறிதும் கவலைப்படவில்லை. ஏனெனில், சரி என்று பட்டதைச் சொல்லும் தன்மை எவனிடமிருந்தாலும் அவன் இக்குறள்கள் மாத்திரமல்ல, இதுபோன்ற வகைகள் பலவற்றிற்கும், மற்றும் அநேக காரியங்களுக்கும் தயாராயிருக்க வேண்டியவன்தான் என்கின்ற முடிவால் கவலைப்பட வில்லை.
அன்பு, ஆசை, நட்பு என்பனவற்றின் பொருளைத் தவிர, வேறு பொருளைக் கொண்டதென்று சொல்லும்படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை ஆண் - பெண் சம்பந்தத்தில் இல்லையென்பதை விவரிக்கவே இவ்வியாசம் எழுதப்படுவதாகும். ஏனெனில், உலகத்தில் காதலென்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி, அதனுள் ஏதோ பிரமாதமான தன்மையொன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அனாவசியமாய் ஆண் - பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்து காதலுக்காகவென்று இன்பமில்லாமல், திருப்தியில்லாமல், தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகிறதை ஒழிக்கவேண்டுமென்பதற்காக வேயாகும்.
இன்றைய தினம் காதலைப்பற்றிப் பேசுகிறவர்கள், ‘‘காதெலன்பது அன்பல்ல, ஆசையல்ல, காமமல்ல’’ என்றும், ‘‘அன்பு, நேசம், ஆசை, காமம், மோகம் என்பவை வேறு. காதல் வேறு’’ என்றும், ‘‘அது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக ஏற்படுவதாகும்’’ என்றும், அதுவும் ‘‘இருவருக்கும் இயற்கையாய் உண்டாகக் கூடியதாகும்’’ என்றும், ‘‘அக்காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமில்லை’’ என்றும், ‘‘அதுவும் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும்’’ என்றும், அந்தப்படி ‘‘ஒருவரிடம் ஒருவருக்குமாக - இருவருக்கும் ஒரு காலத்தில் காதல்
...more
காதல் என்கின்ற வார்த்தை தமிழா? வடமொழியா? என்பது ஒருபுறமிருந்தாலும், தமிழ்மொழியாகவே வைத்துக்கொண்டாலும் அதற்கு
அகராதியில் பார்த்தாலும் மேற்கண்ட பொருள்களைத் தவிர வடமொழி மூலத்தை அனுசரித்தால் காதலென்பதற்குக் கொலை, கொல்லல், வெட்டுதல், முறித்தல் என்கின்ற பொருள்கள்தான் கூறப்பட்டிருக்கின்றன.
அன்பு, ஆசை, நட்பு, நேசம் என்பவைகளுக்கும் தவிர, வேறு தமிழ் மொழியிலும் நமக்குக் காணப்படவில்லை.
அவன் தன்னைச் சேவகன் மகனென்று சொல்லாமல், தானும் ஒரு பக்கத்துத் தேசத்து ராஜகுமாரனென்று சொல்லிவிட்டால் அவளுக்கு அதிகக் காதலேற்பட்டு, ‘மறு ஜென்மத்திலும்’ இவனைவிட்டுப் பிரியக்கூடாதென்று கருதிவிடுகிறாள்.
உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா? அல்லது கொஞ்ச நாளாவது பழகியவுடன் உண்டாகுமா? பார்த்ததும் ஏற்பட்ட காதல் உயர்வானதா? அல்லது சிறிது நாள் பழகிய பின் ஏற்படும் காதல் உயர்வானதா? சரீரத்தைக்கூடச் சரியாய்த் தெரிந்து கொள்ளாமல் தூர இருந்து பார்ப்பதாலேயே ஏற்படும் காதல் நல்லதா? அல்லது சரீரத்தின் நிலை முதலியவைகள் தெரிந்து, திருப்தியடைந்த காதல் நல்லதா?
ஒரு ஜதை காதலர்களில் அவ்விருவரும் ஞானிகளாய் - துறவிகளாய் விட்டார்களானால், இந்தச் சந்தர்ப்பத்தில் ஒருவரையொருவர் பிரிவதும், வெறுப்பதும் காதலுக்கு விரோதமாகுமா? விரோதமாகுமானால் அப்படிப்பட்ட காதல் பயன்படுமா? விரோதமில்லையானால் ஒருவர் ஞானியாகித் துறவியாகிவிட்டதால், மற்றவரை விட்டுப் பிரிந்து செல்வது காதலுக்கு விரோதமாகுமா?
மனிதனுக்கு தானாகவே எதிலும் விரக்தி வருவதும், வெறுப்புக் கொள்வதும், பிரிவதும் இயற்கையாகும்.
எப்படிப் பக்திமானென்றால், இப்படி இப்படியெல்லாமிருப்பான் என்று சொல்லப்பட்டதால், அநேகர் தங்களைப் பக்திமான்கள் என்று பிறர் சொல்லவேண்டுமென்று கருதிச் சாம்பல் பூச்சுப் போடுவதும், சதா கோயிலுக்குப் போவதும், பாட்டுகள் பாடிக் கண்ணீர் விட்டு அழுவதும், வாயில் சிவ சிவ, ராம ராம என்று கூறிக் கொண்டிருப்பதுமான காரியங்களைச் செய்து, பக்தி மான்களாகக் காட்டிக் கொள்ளுகிறார்களோ அதுபோலும், எப்படிக் குழந்தைகள் தூங்குவதுபோல் வேஷம் போட்டுக் கண்களை மூடிக் கொண்டிருந்தால் பெரியவர்கள் குழந்தைகளின் தூக்கத்தைப் பரிசோதிப்பதற்காக ‘‘தூங்கினால் கால் ஆடுமே’’ என்று சொன்னால், அந்தக் குழந்தை தன்னைத் தூங்குவதாக நினைக்க வேண்டுமென்று
...more

