சமகாலத்தில் நான் சந்தித்து அடிபணியவேண்டும் என்று விரும்பும் மாமனிதர்களில் ஒருவர் தலாய் லாமா. அவரது ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு புகைப்படமும் என்னைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது. காந்தியோ அவருக்குப்பின்னால் உள்ள மகாத்மாக்களோ வெறும் புராணக்கதைகள் அல்ல என்பதற்கான வாழும் உதாரணம். சமீபத்தில் பௌத்த மடாலயங்களில் காவிச்சிம்மாசனத்தில் இருக்கும் அவரது புகைப்படங்களை மீண்டும் மீண்டும் பார்த்தேன். ஒவ்வொருமுறையும் அறிவையும் அகங்காரத்தையும் அடக்கி சிரம் தாழ்த்தினேன்
தலாய் லாமாவின் ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுத்ததைப்பற்றி பிரகாஷ் சங்கரனின் நுட்பமான அரிய பதிவு காந்தி டுடே இணையதளத்தில்
Published on September 16, 2013 19:30