பனிவெளி மர்மங்கள்
இப்புத்தகம் சிறுவர்களுக்கான புத்தகம் மட்டுமின்றி நம் அனைவரும் வாசிக்கக் கூடிய புத்தகமே!
இப்புத்தகத்தில் ஆசிரியர் கூறும் கதை அனைத்து விதமான கோட்பாடுகளையும் எடுத்துரைக்கிறார். அறிவியல், மனம், ஆன்மீகம், மனித மாண்பு, பரிணாம வளர்ச்சி, காலநிலை.
பனிமனிதன்:
லடாக்கில் இராணுவப் பணியில் ஈடுபட்டிருந்த போது இராணுவ வீரர்களுக்கு ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடக்கிறது. அவர்களுக்கு வித்தியாசமான ஒரு கால் தடம் தென்படுகிறது. அது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது. ஆனால் இதற்கு முன்பு இது போல ஒரு கால் தடத்தை அவர்கள் பார்த்துள்ளனர் அதை பதிவு செய்துள்ளனர். இதனுடன் முந்தைய பதிவுகளை ஒப்பிடும்போது ஒரே மாதிரியான அடையாளம் உள்ளதால். அது என்ன என்பதை ஆராய முடிவு செய்கின்றனர் அதற்கு பாண்டியன் என்ற அதிகாரை நியமிக்கப்படுகிறார் அவர் இதைப்பற்றி தெரிந்து கொள்ள பயணம் மேற்கொள்கிற இதற்கு உதவியாக ஒரு மருத்துவரை சென்று சந்திக்கிறார்.
ஏனென்றால் அவர் தான் இதைப் போன்ற ஆராய்ச்சிகளில் அறிவு மிகுந்தவர் அவரின் உதவியுடன் ஆராய்ச்சியை மேற்கொள்கின்றனர்.
அவரை சந்திக்க செல்லும் பொழுது அந்த ஊர் அவர் அவருக்கு வித்தியாசமாக இருக்கிறது அங்கு உள்ள வீடுகளும் மக்களும் மக்களின் வாழ்க்கையும். திடீரென அங்கு வாழ்கின்ற ஒருவரின் மகன் காணாமல் போனதனால் அவர் திரும்பி வரும்போது அவரை ஏற்க மறுக்கின்றனர் ஆனால் இவர்கள் வற்புறுத்தியும் அவர்கள் ஏற்க மறுக்கின்றனர் ஏனென்றால் அமானுஷ்யம் இவனை பின்தொடர்ந்து வரும் அது ஊருக்கும் ஆபத்தாகும் என்று அவர்கள் ஒரு மூடநம்பிக்கையில் இருக்கின்றனர். ஆனால் டாக்டரும் பாண்டியனும் அவனை தன் வசம் வைத்துக் கொள்வது என்று முடிவு செய்கின்றனர். அவனுக்கு மருத்துவ உதவிகளும் சேர்ந்து அவனை மீட்கின்றனர்.
அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதும் விழித்துக் கொண்ட கிம் தான் இது போன்ற உருவத்தை பார்த்ததாகவும் அது தன்னை காப்பாற்றியதாகவும் கூறுகின்றான். இந்த ஆராய்ச்சியில் கிம்மின் உதவி இவர்களுக்கு பலம் சேர்க்கும் என்று அவனையும் இவனுடன் சேர்த்துக் கொள்கின்றனர் மூவரும் சேர்ந்து தேடுதலை மேற்கொள்கின்றனர்.
அப்பொழுது தங்களுக்கு தேவையான உணவு மற்றும் உபகரணங்கள் எடுத்துக்கொண்டு அவர்களின் தேடுதல் தொடங்குகிறது. பயணத்தின் உரையாடலில் டாக்டர் அறிவியல் சார்ந்த விஷயங்களை அங்கே ஏற்படும் சூழ்நிலைகளை வைத்து விளக்குகிறார், கிம்மும் புத்தரின் ஞானங்களை பற்றியும் தத்துவங்களை பற்றியும் கூறுகின்றான், பாண்டியன் தனக்கு தெரிந்த ராணுவ யுத்தத்திகளை மட்டும் பாரதியார் கவிதைகளின் அப்பயணத்தில் பகிர்ந்து கொண்டு அவர்களின் பயணம் தொடர்கிறது.
அவர்கள் பயணிக்கும் பகுதி முழுக்க முழுக்க பனியால் படர்ந்த பகுதி அதனால் அவர்களுக்கு அங்கு ஆபத்து அதிகமாகவே இருந்தது ஆனால் அந்த இடர்பாடுகளை சமாளித்து அதில் இருந்து தப்பித்து அவர்கள் என் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது ஒரு கட்டத்தில் அவர்கள் சில புத்த துருவிகளை பார்க்கின்றனர் அவர்களுடன் உரையாடும் போது தான் தெரிகிறது. அவர்கள் தேடி வந்ததைப் பற்றி கூறுகின்றனர் அவர்களும் அவர்களுக்கான வழியை காட்டுகின்றனர் ஆனால் அப்படி மிகுந்த ஆச்சரியத்தையும் ஆபத்தையும் உள்ளடக்கியதாக என்று இவர்கள் நினைத்துக் கொள்கின்றனர்.
தொடர்ந்து அவர்களின் பயணம் தொடர்கிறது இதில் வித்தியாசமான விலங்குகளையும் வித்தியாசமான சூழ்நிலைகளையும் காலநிலை என் மாற்றங்களையும் அவர்களுக்கு ஆச்சரியத்தையும் அதிசயமாகவும் அவர்கள் உணர்கின்றனர் அவர்களின் பயணமும் நீண்டு கொண்டே போகிறது. இறுதியாக ஒரு மலையின் பகுதியில் அவர்கள் நிற்கும் போது மலையின் வலைவில் உள்ளே ஒரு அடர்ந்த காடு இருக்கிறது அங்கு உள்ளே செல்லும் பொழுது தான் அவர்களுக்கான வித்தியாசமான ஆச்சரியங்கள் காத்துக் கொண்டிருக்கிறது அங்கு பறவைகள் விலங்குகள் எல்லா வகையான உயிரினங்களும் இருக்கிறது ஆனால் அவைகள் பரிணாம வளர்ச்சியில் மாற்றம் அடையாத நிலையில் உள்ள உருவங்களை கொண்டே இருக்கிறது அங்கு திடீரென சில மனிதர்கள் தோன்றுகின்றன அவர்கள் தான் இவர்கள் தேடி வந்த பனி மனிதன்.
அவர்கள் சிந்திக்கும் திறனும் செயல்படும் திறனும் ஒரே மாதிரியாக இருக்கிறது அங்கு சென்று இவர்களுக்கு வரவேற்பும் பலமாக இருக்கிறது அவர்களுடன் இவர்கள் சேர்ந்து லடாக் மொழியில் பேசுகின்றன அவர்களை இவர்கள் மெல்ல மெல்ல புரிந்து கொள்கின்றனர் அந்தப் பகுதி இவர்களுக்கு சில வித்தியாசமான அனுபவங்களையும் அளிக்கின்றது அது இவர்களுக்கு உற்சாகத்தையும் புதுவித உணர்வையும் கொடுக்கிறது அவர்கள் சில நாட்கள் அங்கேயே இருக்கின்றனர்.
அவர்கள் ஏன் இப்படி இருக்கிறார் என்பதை பற்றியும் மற்றும் விலங்குகள் பற்றியும் டாக்டர் விளக்குகிறார். ஒரு கட்டத்தில் அவர்கள் வந்தது நோக்கம் குறித்து அவர்கள் அங்கிருந்து புறப்பட நினைக்கின்றன அவர்களுக்கும் அவர்களிடமிருந்து உணர்வு மூலம் சம்பந்தம் வருகிறது அவர்களும் அங்கிருந்து புறப்படுகின்றனர் மீண்டும் அவர்களது பயணம் தொடர்கின்றது.
இறுதியில் அவர்கள் அங்கு ஆராய்ந்தை என்ன செய்தார்கள் அவர்கள் வழியில் யாரை எல்லாம் சந்தித்தார்கள். கிம் இவர்களுடன் பயணித்தானா. அந்த மூவர்களின் இறுதி முடிவு என்ன ஆனது?
பழனிராஜா
வாசிப்போம் தமிழிலக்கியம் வளர்ப்போம் குழுமம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

