மனிதகுலத்தின் மீதான நம்பிக்கை- மீனாட்சி நாராயணன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, 

கடந்த சில வருடங்களாகவே நான் புத்தகங்களை ஆன்லைனில் தான் வாங்குகிறேன். செயற்கை நுண்ணறிவு வைத்து பரிந்துரைக்கப்படும் பாடல்களும்/ புத்தகங்களும் ஓரளவுக்கு நமக்குப் பிடித்தவகையாகவே இருக்கின்றன.  இரண்டு வாரங்களாக “மனிதகுலம் – நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு” புத்தகப் பரிந்துரை உள்டப்பியில் வந்து கொண்டே இருந்தது.

10 வருடங்களுக்கு முன்பு படித்த Selfish Gene புத்தகத்தை படித்து நிறைய விடையில்லா கேள்விகளுடன் இருந்தேன்.  அறிவியலில் வாழ்வது சுயநலத்திற்காகவே என்று கூறப்பட்டால் மதத்தில் மோட்சம் என்னும்  கருதுகோள் சற்று சுயநலமானதோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். வாழ்வோ சாவோ சுயநலம்தான் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அறம், பண்பு போன்றவை உருவாகி வந்த விதத்தை இதை வைத்து புரிந்து கொள்வது கஷ்டமாக இருந்தது. 

எதிர்மறை  செய்திகளே உலகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பொழுது இந்த மாதிரியான ஒரு புத்தகம் மிக நல்ல முயற்சி. ஆங்கிலத் தலைப்பான Humankind என்பதே என்னை அதை நோக்கி இழுத்தது. புத்தக ஆசிரியர் Rutger Bregman. மனித இனத்தின் இரக்க குணத்திலும் தன்னலம் பாராமல் பிறருடைய நலம் மீது அக்கறை கொள்கின்ற பண்பிலும் நம்பிக்கை கொள்வது எவ்வாறு நாம் சிந்திக்கும் விதத்தை மாற்றியமைக்கும் என்பதையும் , அதன் மூலமாக சமுதாயத்தின் உண்மையான மாற்றக் உருவாக்குவதற்கான அடித்தளமாக எவ்வாறு செயல்படும் என்பதையும் ஆசிரியர் இந்த நூலில் அலசுகிறார். தமிழில் நாகலட்சுமி சண்முகம் மொழிபெயர்த்துள்ளார். 

நூலின் ஆரம்பத்திலேயே தத்துவார்த்த குத்துச்சண்டை வளையத்திற்குள்  தத்துவவியலாலாளர்ரகளான தாமஸ் ஹாப்ஸ் யும் ( Thomas Hobbies) , ஜீன் ஜாக்ஸ் ரூஸோவையும் ( Jean Jacques Rousseou) எதிரெதிர் துருவத்தில் நிறுத்துகிறார்.  மனிதன் தீய இயல்பு கொண்டவன் என்று நம்ப வைக்க என்ற ஒரு அவநம்பிக்கையாளர் என்ற பட்டத்துடன் Hobbes நிற்கிறார். ஒரு குடிமை சமுதாயத்தால் மட்டுமே நம்முடைய அடிப்படை இயல்பிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று அவர் உறுதியாக நம்பினார். இதற்கு நேர் எதிராக ரூஸோ மனிதர்கள் அனைவரும் அடிப்படையில் நல்லவர்கள் என்றும் நாகரீகம் மனிதனை காப்பாற்றுவதற்கு பதிலாக அவனை சீரழிக்கவே செய்கிறதும் என்றும் அவர் வாதிட்டார்.

Hobbes தன்னுடைய லெவாயத்தன் ( Levaithan)நூலில், ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாம் சுதந்திரமானவர்களாக இருந்தோம் நமக்கு பிடித்ததை நம்மால் செய்ய முடிந்தது ஆனால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருந்தன. மனிதர்கள் பயத்தால் முடுக்கி விடப்படுகின்றனர் எனவே நாம் பாதுகாப்பிற்காக ஏங்குகிறோம். அதன் விளைவு எல்லோரும் எல்லோருக்கும் எதிராக சண்டையிடும் ஒரு சூழல் உருவானது. ஆனால் அதே நேரத்தில் நாம் பயப்படத் தேவையில்லை என்ற நம்பிக்கையும் அவர் நமக்குத் தருகிறார் சட்ட ஒழுங்கு தீர்ப்புகளை சரி செய்து அமைதியை நம்மால் நிலைப்படுத்த முடியும் நாம் அனைவரும் நம்முடைய சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க ஒப்புக்கொள்ளும் பட்சத்தில். நான் நம்முடைய உடலையும் ஆன்மாவையும் தனி ஒரு மாபெரும் சக்தியின் கைகளில் ஒப்படைக்க தயாராக இருக்க வேண்டும் அந்த சக்தியை அவர் Levaithan என்று அழைத்தார். ஹாப்ஸுக்கு பின்னால் வந்த எண்ணற்ற நிர்வாகிகள் சர்வாதிகாரர்களுக்கு வலியுறுத்திய ஒரு வாதத்திற்கு அடித்தளத்தை ஹாப்ஸின் சிந்தனை அமைத்துக் கொடுத்தது. 

” எங்களுக்கு அதிகாரத்தை கொடுங்கள் இல்லையேல் நீங்கள் எல்லாவற்றையும் இழந்து விடுவீர்கள்“

ரூசோ விற்கு திருப்புமுனையாக அமைந்தது அவர் கலந்த கொண்ட கட்டுரை போட்டி தலைப்பு “அறிவியல் மற்றும் கலைகளின்  மறுசீரமைப்பு அறம் ஒழுக்கத்தை தூய்மைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளதா?” முதன்முதலாக ஒரு சில சதுர அடி நிலத்தை வளைத்து போட்ட ஒருவன் இது எனக்கு சொந்தமானது என்று நினைப்பே தன் மனதில் விதைத்தான். அதை அவன் வெளிப்படையாக அறிவித்த போது மக்கள் மிகவும் எளிமையானவர்களாக இருந்ததை கண்டு வியந்தான். குடிமை சமுதாயத்தை உண்மையில் தோற்றுவித்தவன் அவன் தான். சபிக்கப்பட்ட இந்த குடிமை சமுதாயம் உருவான நாளிலிருந்து தான் விஷயங்கள் தவறாக போகத் தொடங்கியதாக ரூஸோ வாதிட்டார். மனிதர்களாகிய நாம் இயற்கையோடு ஒன்று சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த பொழுது நாம் இரக்கமுள்ள ஜீவன்களாகத்தான் இருந்தோம் ஆனால் இப்போது தன்னலவாதிகளாகவும் அவநம்பிக்கையாளர்களாகவும் ஆகியுள்ளோம் இப்பொழுது நாம் பலவீனவர்களாக/ சோம்பேறிகளாக மாறிப்போய்விட்டோம். நாகரிகத்தின் வளர்ச்சி ஒரு தவறு என்றும் நாம் நம்முடைய சுதந்திரத்தை ஒருபோதும் விரயமாக்கி இருக்கக் கூடாது என்று ரூஸோ  எழுதினார். அவருக்குப் பின்னால் வந்த எண்ணற்ற அராஜகவாதிகளும் சுதந்திர விரும்பிகளும் லட்சக்கணக்கான முறை மீண்டும் மீண்டும் வலியுறுத்திய ஒரு வாதத்திற்கான அடித்தளத்தை ரூசோவின் சிந்தனை அமைத்துக் கொடுத்தது. 

” எங்களுக்கு சுதந்திரத்தை கொடுங்கள் இல்லையேல் நீங்கள் எல்லாவற்றையும் இழந்து விடுவீர்கள்“

இந்த இரண்டு  தத்துவவியலாளர்களின்  யாருடைய கண்ணோட்டம் சரியானது என்ற கேள்வியை ஆசிரியர்  ஆராய்கிறார்.

நான் முதல் முதலில் ஹாப்ஸ் என்கிற தத்துவவியலாளரை பற்றி அறிந்தது  Calvin and Hobbes  கார்ட்டூன் வழியாகத்தான். ஹாப்ஸின் இந்த வாதத்தை நகைச்சுவையாக வெளிப்படுத்தக்கூடிய  சில பக்கங்கள் இந்த கார்ட்டூனில் உண்டு.

நூலாசிரியர் பின்வரும் தலைப்புகளில் இவ்விரு வாதங்களுக்கு உண்டான விளக்கங்களை முன் வைக்கிறார். 

1. பரிணாம வளர்ச்சி 

2. மனித குலத்தின் தற்போதைய நிலவரம் 

3. நாடுகளாக எவ்வாறு வினையாற்றுகிரோம் _ போர்க்காலங்களில்

5.பெருநிறுவனங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள்.

 பரிணாம வளர்ச்சி

முதல் உயிரினம் தோன்றி நாநூறு  கோடி ஆண்டுகளுக்குப் பிறகே  மனிதன் தோன்றியுள்ளான். மனிதர்களாகிய நாம் எவ்வளவு தனித்துவமானவர்களாக  கருதினாலும் மற்ற உயிரினங்களைப் போலவே நாமும் பரிணாம வளர்ச்சியின் விளைவு தான் என்று என்பது மறுக்கப்படாத உண்மை. உதனிகள் என்று அழைக்கப்படுகின்ற உடல் முழுவதும் ரோமங்களைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த விலங்கினங்கள் தான் நாம் மனிதனும் மனித குரங்குகளையும் ஒத்த வேறு பல  உயிரினங்கள் பூமியில் நம்முடன் உலா வந்து கொண்டிருந்தன. பின்னர் திடீரென மறைந்து விட்டது.  நியான்தற்கள் sapiens விட மிக வலுவானவர்கள்/ உயரமானவர்கள் மூளையும் நமது தற்போதைய மூளையின் அளவைவிட சராசரி 20 மடங்கு பெரியதாக இருந்திருக்கிறது.  வரலாற்றியலாளரான  Yuval Noah Hari, வரலாற்றின் முதல் இன ஒழிப்பு நடவடிக்கை ( sapiens Vs Neandrathals )நடந்திருக்கலாம் என்று யூகிக்கிறார். 

இதற்கு எதிர்வாதமாக  நரியிலிருந்து நாயை உருவாக்கும் ஆய்வு சைபீரியாவில் நடந்ததை பற்றி குறிப்பிடுகிறார். அம்மாற்றம் நடந்ததற்கு முக்கிய பண்பு நலனாக கருதப்பட்டது “தோழமை“என்பது. இதையே மனிதர்களுக்கு பார்த்தால் Neanderthal  Sapiens ஆகிய தற்போது தனி  நபரை விட அதிக அறிவார்ந்ததாகர இருந்திருக்ககூடும். ஆனால் சேப்பியன்ஸ் ஒரு பெரிய குழுக்களாக சேர்ந்து வாழ்ந்தனர். Neandrathals சூப்பர் கம்ப்யூட்டர் என்று வைத்தால் சேப்பியன்ஸை வைஃபையுடன் கூட கம்ப்யூட்டர் என்று வைத்துக் கொள்ளலாம் ஒருவரோடு ஒருவர் சிறப்பாக பிணைக்கப்பட்டு இருக்கிறோம். இதுவே நாம் மனிதர்களாக நீடிப்பதற்கு உதவி செய்கிறது.

ஆனால் நடைமுறையில் குழுக்களுடன் மோதல் என்பதை நாம் வரலாற்றின் வழியாக பார்த்துக் கொண்டே இருக்கிறோம். அது எவ்வாறு நிகழ்வது என்பதற்கு விளக்கம் இவ்வாறு அளித்துள்ளார் எந்த அம்சம் நம்மை கனிவான உயிரணுமாக ஆக்கியதோ அதே அம்சம்  இது யார் நம்மை பெரும்பளவு ஒத்திருக்கிறார்களோ அவர்களுக்கு அதிகமான ஈர்ப்பு ஏற்படுகிறது. இதற்கு ஆக்சிடோஸின் என்ற ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் ஆக்சிடோசன் இன் தாக்கம் ஒருவருடைய சொந்த குழுவினரோடு நின்று விடுகிறது என்பதையும் கண்டுபிடித்துள்ளனர் அந்த ஹார்மோன் நண்பர்கள் மீது பாசத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அந்நியர்கள் மீது வெறுப்புணர்வை தூண்டவும் செய்கிறது. 

இப்பொழுதும் பழங்குடியினர்கள் மூர்க்கமான மக்கள் எப்பொழுதும் போரிட்டுக் கொண்டே இருக்கின்ற ஒரு சமூகமாகவே கருதப்படுகிறது. ஸ்டீவன் பிங்கர் இன் தி பெட்டர் ஏஞ்சல்ஸ் ஆஃப் அவர் நேச்சர் புத்தகம் வெளி வரும் வரை, யாநூமமி பழங்குடியின மக்களை பற்றி ஆய்வின்படி “மூக்கமான மக்கள்” ( the fierce people)  என்பதே பெரிதாக முன்வைக்கப்பட்டது. ஸ்டீபன் பிங்கரின் புத்தகங்கள் புள்ளி விவரங்களோடு நமது அந்த புரிதல் சரியில்லை என்பதை விளக்கியது. 

வேட்டைச் சமூகமாக இருந்தவரை  சண்டை சச்சரவின்றி இருந்து வந்தோம் . பின்னர் ஓரிடத்தில் தங்கி உடைமைகளை அதிகரிக்கச் செய்யும்பொழுது இந்த மாற்றம் நிகழ்ந்தது.

இதேபோன்று மற்றொரு உதாரணம் ஈஸ்டர் ஐலேண்ட் மோவாய்  இன மக்கள். இவர்களைப் பற்றி எதிர்மறையான செய்திகளை அதிகம் கிடைக்கின்றன. ஆனால் உண்மையில் கேப்டன் ஜேம்ஸ்  குக்கின் குறிப்பேடுகளின் படி இவர்கள் மிகவும் திறமையானவர்கள் வல்லவர்கள் என்று குறித்து வைத்திருந்தார். ஆனால் பின் வந்த ஆய்வாளர்களான ஜெராடூ டைமண்ட்,  பால் ஜான் பிளான்சி ஆகியோர் அத்தீவுவாசிகளை நரமாமிசம் உண்பவர்களாக  சித்தரிக்க ஆரம்பித்து விட்டனர்.  இக்கருத்து அதிகம் பரவியதால் இப்பொழுதும் நாம் பழங்குடிகள் என்றால் நர மாமிசம் சாப்பிடுபவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். 

தற்போது எலிகளை வைத்து ஆய்வு செய்யும்  பல்கலைக்கழகத்தில், எலிகளை இரு குழுவாக பிரித்து ஒன்றிற்கு புத்திசாலியான எலிகள் ( group 1)என்று எழுதி வைத்து அடுத்ததற்கு மந்த புத்தி ( குரூப் 2) எலிகள் என்றும் எழுதி வைத்தனர். சில பார்வையாளர்களை தேர்ந்தெடுத்து இரண்டு எலி குழுக்களும் எவ்வாறு செயல்படுகிறது என்று சோதனை செய் செய்தார்கள். இச்சோதனையில் கலந்து கொண்ட எல்லோரும் புத்திசாலி எலிகள் என்ற குழுவில் பிரிக்கப்பட்டு இருந்த எலிகள் எல்லாம் நன்றாக செய்வதாக குறிப்பிட்டு  இருந்தனர்.  உண்மையில் எல்லா எலிகளுமே ஒன்றுதான், அவைகள் செய்தது எல்லாமே ஒரே மாதிரி தான். ஆனால் ஒரு நல்ல பண்பிற்கு அடையாளப்படுத்தி விட்டால் மக்கள் எல்லாருமே நல்ல விதத்தை பின்பற்றுகின்றனர் என்று அந்த குறிப்பு உணர்த்தியது. 

இதுவே தனியார் கம்பெனிகளுக்குமே பொருந்துகிறது என்றும் ஆய்வு குறிப்பிடப்பட்டுள்ளது.

 சந்தேகத்தைக் கைவிட்டு விட்டு மனித இயல்பு குறித்து அதிக நேர்மறையான ஒரு கண்ணோட்டத்தை நீங்கள் எடுக்கும் பொழுது எல்லாமே மாறுகிறது என்று இந்த ஆய்வுகள் சான்று பகர்கின்றன.

எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் நான் இதை கண்டதுண்டு கொரோனா காலகட்டத்தில் முதல் இரண்டு தினங்கள் பிடி கிடைக்காமல் மக்கள் அலைந்தாலும் பின்னர் நான் இருந்த அடுக்குமாடி குடியிருப்புகளில், எதிர்மறை செய்திகளால் மிகவும் பாதிக்காத வண்ணம் அவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டனர். உங்களின் நோய் தொற்று கதை களியாட்டங்களையும்  இதில் அடக்கலாம்.

இந்நாட்களில் சுதந்திரம் இல்லாமல் விளையாட்டு இல்லாமல் உள்ளார்ந்த ஊக்கமில்லாமல் நம்மில் பலர் வேலை செய்கின்ற விதம் மனத்தளர்ச்சி பெருந்தொற்றை தூண்டிக் கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கு வேட்டையாடி  சமுதாயங்கள் எந்த தத்துவத்தை கடைப்பிடிக்கின்றனரோ அதே தத்துவத்தை நாமும் கடைப்பிடித்தால் இந்நாட்களுக்கு இது பொருத்தமாக இருக்கும். நம்முடைய குழந்தைகள் சக ஊழியர்கள் அண்டை வீட்டார் ஆகியோரை பற்றி மட்டுமல்லாமல் நம்முடைய எதிரிகளை பற்றியும் நல்லவிதமாக நினைத்தால் என்ன நிகழும்?அவ்வாறு நினைப்பது நமக்கு மிகவும் கடினமாக இருக்கும் ஆனால் இரண்டு மாபெரும் தலைவர்கள் ஆன மகாத்மா காந்தியும் மாட்டின் லூதர் கிங் இயல்புக்கு புறம்பான நடத்தையில் கைதேர்ந்தவர்கள் அசாதாரண தனி நபர்கள்.

நம் கேளிக்கை சினிமாக்களிலுமே எதிர்மறை வன்முறை படங்களே கொண்டாடப்படுகிறது. எதார்த்த உலகத்தைப் பற்றிய சினிமாக்கள், ஒரு நாடகத் தனமான சித்தரிப்பு என்று நையாண்டி செய்யப்படுகிறது. 

நிறைவு பகுதியில் ஆசிரியர் மனித இயல்பைப் பற்றிய ஒரு எதார்த்தமான பார்வை நீங்கள் மற்றவர்களுடன் உறவாடும் விதத்தின் மீது முக்கிய தாக்கம் ஏற்படுவதை விளக்குகிறார். 

ஹாப்ஸ்சை பற்றி ஒரு செவி வழி கதை உலவுகிறது. ஒரு நண்பருடன் லண்டனில் சுற்றித்திரிந்தபோது ஒரு பிச்சைக்காரனுக்கு சிறிது பணம் கொடுத்தார்.அவர் நண்பர் இதை  பார்த்து சுயநலமாக இருப்பது தான் நம்முடைய அடிப்படை இயல்பு என்று வாதிட்டவரே பிச்சைக்காரனுக்கு உதவுகிறார் என்று வியப்புற்றார். உண்மை என்னவென்றால் ஒரு நல்ல காரியம் செய்வது நமக்குள் ஒரு நல்ல விதமான உணர்வை தோற்றுவிக்கிற உலகில் நாம் வாழ்கிறோம். இரக்கம் vs  பச்சாதாபம் பகுதி என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

புத்தகத்தைப் படித்து முடித்ததும் கொஞ்சம் அதிகமாக sugar coated ஆக இருக்கிறதோ என்று தோன்றியது. ஆனால் இப்போதுள்ள நிலைமைக்கு இது கொஞ்சம் அவசியம்தான் என்றும் பட்டது. 

When it becomes too negative, positive has to go extra miles to compensate that.

அன்புடன்,

மீனாட்சி

மனிதகுலம் ஒரு நம்பிக்கையூட்டும் வரலாறு வாங்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.