இன்றைய காந்தி- கமல் உரை
இந்தியாவின் மிக முக்கிய வரலாற்று கால கட்டம் ஒன்றின் நாயகனை, அன்றைய இந்தியாவின் சமூக பண்பாட்டு அரசியல் பின்புலத்தில் வைத்து விவாதிக்கும் நூல் ’இன்றைய காந்தி’. என்னுடைய நண்பர் ஜெயமோகன் எழுதிய இந்தப் புத்தகம் காந்தியை அறிந்துகொள்ளவும் புரிந்து கொள்ளவும் உதவக்கூடிய மிக முக்கியமான ஆக்கம்.
*
கமல்ஹாசன் இன்றைய காந்தி பற்றி பேசும்போது ஒருமுறை சொன்னார். ‘காந்தியின் ஒரு பலவீனத்தைக்கூட நீங்க சொல்லாம விடலை. ஒரு தோல்வியைக்கூட விட்டுவிடலை. அதுக்கு அப்றம் என்ன மிஞ்சுது காந்தியிலேன்னு பாக்கிறீங்க. அது எவ்ளவு பெரிய விஷயம்னு தெரியுது’ என்று சொன்னார். உண்மையில் இன்றைய காந்தி நூலின் வலிமையே அதுதான். அது எதையும் மழுப்பவில்லை. எதையும் நியாயப்படுத்தவில்லை. அப்பட்டமான நேர்மையுடன் காந்தியை மதிப்பிடுகிறது. இதே அளவுகோலை வேறு எந்த தலைவருக்கு வைக்கமுடியும், வழிபாட்டுணர்வு இல்லாமல் மதிப்பிட்டால் ஒவ்வொருவரிடமும் எவ்வளவு தேறும் என எவரும் சிந்திக்கமுடியும்.
ஜெ
இன்றைய காந்தி வாங்க
இன்றையகாந்தி மின்னூல் வாங்க
Published on September 10, 2025 11:31