உருது இலக்கியம், கஸல் மரபு- இசையுடன் அறிமுகம்
ஃபயஸ் காதிரி அவர்கள் நடத்தும் உருது இலக்கியம்- கஸல் அறிமுக நிகழ்வு மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற ஒன்று. மரபான உருது கவிஞர்- பாடகர் குடும்பத்தில் வந்தவர் காதிரி. பாடகரும்கூட.உருது இலக்கியம் என்பது வடக்கே இருப்பது அல்ல. தமிழகத்தின் மிகச்சிறப்பான மரபுகளில் ஒன்று அது. உருது இலக்கியத்தின் ஒட்டுமொத்தச் சித்திரத்தை, குறிப்பாக முகலாயர் காலம் முதல் வரும் கவிமரபை அறிமுகம் செய்யும் காதிரி அதன் மிகச்சிறப்பான வெளிப்பாடான கஸல் இசை மரபையும் அறிமுகம் செய்கிறார்.
நாம் லதா மங்கேஷ்கர், வாணிஜெயராம் முதல் ஹரிஹரன் வரை பலர் பாடிய கஸல் பாடல்களைக் கேட்டிருப்போம். ஆனால் உண்மையில் ரசிக்க அடிப்படைப்பயிற்சி அற்றவர்களாகவும் இருக்கிறோம். அந்த அறிமுகப்பயிற்சி நமக்கு முற்றிலும் புதிய ஓர் உலகைத் திறந்து தருவது. ஒரு பெரிய தொடக்கம்.
(அக்டோபர் 20 அன்று திங்கள்கிழமை தீபாவளி ஆதலால் இந்நிகழ்வு வெள்ளி சனி என இருநாட்கள் மட்டுமே நிகழும். கட்டணமும் அதற்கேற்பவே அமையும்.18 மாலையுடன் நிகழ்வு நிறைவடையும்.)
நாட்கள் அக்டோபர் 17 மற்றும் 18 (வெள்ளி, சனி)விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்- இடமிருப்பவை
மரபின் மைந்தன் முத்தையா நடத்திவரும் மரபிலக்கியம், சைவத்திருமுறைகள் அறிமுக வகுப்புகள் முன்னர் நான்கு முறை நடந்துள்ளன. மீண்டும் நிகழவிருக்கின்றன.
சைவத்தை அறிவதென்பது தமிழை, தமிழ்ப்பண்பாட்டை நுணுகி அறிவதுதான். சைவசித்தாந்தம் சைவத்தின் தத்துவ முகம். சைவத் திருமுறைகள் சைவத்தின் இலக்கிய முகம். சைவத்திருமுறைகளிலுள்ள புகழ்பெற்ற சில பாடல்களையே பரவலாகச் சைவர்கள்கூட அறிந்திருப்பார்கள். கூடுதலாக அறியமுயல்பவர்கள் நூல்களை வாங்குவார்கள், ஆனால் நூல்கள் வழியாக பயிலமுடிவதில்லை.
சைவத்திருமுறைகளைப் பயில ஒரு மரபு உண்டு. இன்றைய சூழலில் நவீன இலக்கியம் மற்றும் நவீன கல்விமுறை அறிமுகம் உடைய ஒருவர் அந்த மரபை இன்றைய சூழலுக்காக மறு ஆக்கம் செய்து கற்பிக்கவேண்டியுள்ளது. மரபின்மைந்தன் முத்தையா அத்தகையவர். நவீன இலக்கியமும் மரபிலக்கியமும் செவ்விலக்கியமும் சைவமும் அறிந்தவர்.
இந்த வகுப்பில் எளிமையான முறையில் தமிழின் மரபிலக்கியத்திற்குள் செல்வது எப்படி என தொடக்கம் அளிக்கப்படும். அதன்பின் சைவத்திருமுறைகளுக்குள் செல்லவும், அவற்றின் கவிச்சுவையையும் தத்துவத்தையும் புரிந்துகொள்ளவும் வழிகாட்டப்படும். இந்த வழிகாட்டல் ஒரு தொடக்கம். ஒருவர் அதிலிருந்து முன்சென்று தன் கல்வியைத் தொடரமுடியும்.
நாள் அக்டோபர் 10, 11 மற்றும்12, (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
வரவிருக்கும் நிகழ்வுகள்
அமலன் ஸ்டேன்லி அவர்களின் விபாசனா நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. பலர் முதல் நிலை பயிற்சியில் கலந்துகொண்டுள்ளனர். இரண்டாம் நிலைப் பயிற்சியை நடத்த அமலன் ஸ்டேன்லி எண்ணுகிறார். முதல்நிலைப் பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் எவரும் இதில் கலந்துகொள்ளலாம்.
விபாசனா பயிற்சி உள்ளத்தை ஒருமையாக்கவும், தேவையற்ற உளச்சுமைகளை உதறிவிட்டு உள அழுத்தமில்லா நிலையை அடையவும், அதன் வழியாகச் செயலில் தீவிரமாக ஈடுபடவும் மிக அவசியமானதாக உலகம் முழுக்க பயிற்றுவிக்கப்படுகிறது. அமலன் ஸ்டேன்லி உலக அளவில் புகழ்பெற்ற பல விபாசனா ஆசிரியர்களிடம் முறையான, நீண்டகாலப் பயிற்சியை பெற்றவர். (பார்க்க வி.அமலன் ஸ்டேன்லி, தமிழ்விக்கி)
பலர் பயிற்சி இல்லாமல் நேரடியாக பத்து நாட்கள், பதினைந்து நாட்கள் விபாசனா பயிற்சிக்குச் சென்று ஓரிரு நாட்கள் தாளமுடியாமல் ஓடிவருவதைக் காண்கிறோம். எங்கள் பயிற்சி என்பது மிகநுணுக்கமாக படிப்படியாக உள்ளத்தை பயிற்றுவிப்பது. இது மரபார்ந்ததும் அறிவியல்பூர்வமானதுமாகும்.
நாள் அக்டோபர் 24 ,25 மற்றும் 26 (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
மரபிசைப் பயிற்சிஜெயக்குமார் நடத்தும் மரபிசைப் பயிற்சிகள் மீண்டும் நிகழ்கின்றன. இவை கர்நாடக இசை எனப்படும் மரபிசையை கேட்டு ரசிப்பதற்கான பயிற்சிகள். எதுவுமே அறியாத தொடக்கநிலையினருக்கானவை. ராகங்களை அறிமுகம் செய்து, திரைப்பாடல்கள் வழியாக அவற்றை செவிக்குப் பழக்கப்படுத்தி, இசைப்பாடல்களை கேட்கச்செய்து இசைக்குள் இட்டுச்செல்லும் முயற்சி இது. பங்கெடுத்த ஒவ்வொருவருக்கும் புதிய தொடக்கமாக அமைந்தவை.
நாள் அக்டோபர் 31, நவம்பர் 1,2 (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
