காந்தி எனும் நிர்வாகி
டைனமிக் மல்டி மெட்டல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நடராஜன், தற்போது தான் படித்துக் கொண்டிருக்கும், எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய, ‘இன்றைய காந்தி’ புத்தகத்தை பற்றி பேசுகிறார்…
நண்பர் டைனமிக் நடராஜனின் பதிவு இது. தினமலர் இதழில்.
இன்றைய காந்தி நூல் வெளிவந்தபோது அது மாணவர்களுக்கு, அரசியல் ஆர்வமுள்ளவர்களுக்கு முதன்மையாக உதவும் என்னும் எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் ஆச்சரியமாக அந்நூலின் முதன்மை வாசகர்களாக அமைந்தவர்கள் ஏதேனும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள்தான். அவர்களே பெருவாரியாக அதை வாசித்தவர்கள், வாங்கி வினியோகமும் செய்தவர்கள்.
ஏனென்றால் காந்தியை ஓர் அரசியல்வாதியாக, தலைவராக மட்டும் அந்நூலில் விளக்கவில்லை. காந்தி என்ற மாபெரும் நிர்வாகவியல் மேதை அந்நூலில் திரண்டு வருகிறார். 1893ல் தன் இருபத்துநான்காவது வயதிலேயே அவர் தென்னாப்ரிக்காவின் உரிமைப்போராட்டத்தின் தலைவராக ஆனார். 1918ல் தன் 49 ஆவது வயதில் இந்தியா வந்தவர் வெறும் ஐந்தாண்டுகளில் காங்கிரஸின் தலைவராக ஆகி ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கினார். ஒரு தேசத்தையே கட்டுப்படுத்தினார். தன் கட்சியின் ஒவ்வொரு பகுதியுடனும் தொடர்புக கொண்டிருந்தார். தேசத்தின் ஒவ்வொரு மூலையையும் அறிந்திருந்தார். ஒவ்வொரு போராட்டத்தில் இருந்தும் பாடங்கள் கற்றுக்கொண்டார்.
இந்திய வரலாற்றின் தேசிய அளவிலான முதல் மக்கள்தலைவர் அவர்தான். வாழ்ந்த இறுதிநாள் வரை இந்தியாவில் அவர்தான் மக்கள் தலைவர், பிற அனைவரும் அவருடைய பெயரின் ஒளியால் திகழ்ந்தவர்களே. அந்த மாபெரும் நிர்வாகியைப்பற்றிய கட்டுரைகள் தொழில்முனைவோரை பெரிதும் கவர்ந்திருப்பதை உணர்ந்தேன்.
காந்தியை நாம் ஒரு அச்சுவடிவமாக ஆக்கிக்கொண்டுவிட்டோம். காந்தி இந்தியாவின் தந்தை, சுதந்திரப்போராட்டத்தை நடத்தியவர் என்பது ஒரு வரிதான். காந்தியின் முகங்கள் மேலும் பல.ஒவ்வொன்றையும் விளக்கும் நூல் இது.
ஜெ
இன்றைய காந்தி வாங்க இன்றையகாந்தி மின்னூல் வாங்கJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
