
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,நிழல்கள் உடனான உங்களின் ஆட்டம் இன்னும் ஓயவில்லை போலும். அதுவும் இது கருமையான நிழல் அல்ல, நீல நிழல். அறிய முடியாமையின் நிறம் நீலம். கருமைக்குள் ஒளி பரவுவதன் வண்ணம். கொற்றவையில் தொடங்கி நீலம் கண்ணன் வழியாக, அருதியாக, அறிய முடியாத , முடிவற்ற வல்லமை கொண்ட எல்லாவற்றிற்கும் நீல வண்ணம் கொடுத்துள்ளீர்கள்.“நாயகனான” நாயக்கர் சொல்லுவது எல்லாம் சிறந்த தத்துவ ஆசிரியர் பேசுவது போல் உள்ளது.” வெட்டுவது தாண்டா உன் வேலை அவன் சாவு உன் வேலை இல்லை” என்பது கிட்டத்தட்ட கீதையின் வரிகளுக்கு (” கடமையைச் செய் பலனை எதிர்பாராதே” சமானம். சாவு என்பது உடல் சாவு மட்டுமல்ல உயிருக்கு நிகராக ஒன்றை செய்வதை நிறுத்துவதும் சாவுதான். As usual it is more of a personal catharsis journey than a definite answers. நாயக்கரை நீட்சேயின் உபர்மேனின் ஒரு பகுதியாக கருதலாம். தூக்கு கயிறு அருந்து விழும் வேளையில் நான் புதுமைப்பித்தனின் எமன், கிழவியுடன் ஆன உரையாடலை நினைத்துக் கொண்டேன்.நாயக்கர் தனது சாவை , சாவாக பார்க்காமல் வாழ்க்கை எக்ஸ்டென்ஷன் ஆக பார்க்கிறார, அவருக்கு சாவு இல்லை. Legacy continues. பிறக்கும் முன்பிருந்தே நாய் குட்டி மாதிரி கூடவே வருகிறது. நாயக்கரும் காலத்திற்கு அப்பால் நிற்கிறார்.மூன்று மாதங்களாக உங்களின் நிழல் விளையாட்டை, வார்த்தைகளில் படிப்பதற்காகவே கண் விழிக்கிறேன்.அன்புடன்,
மீனாட்சி
Published on July 15, 2025 00:34