வெண்முரசு நாள்
இன்று குருபூர்ணிமா. இதை வெண்முரசுநாளாகக் கொண்டாடுவதாக முடிவுசெய்து 2020 முதல் தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறோம். மகாபாரதத்தின் ஆசிரியனாகிய கிருஷ்ண துவைபாயன மகாவியாசனின் நாள் என இது கருதப்படுகிறது. இந்நாளில் வியாசகாவியத்தையும் அதன் வழிநூல்களையும் பயில்வது, தங்கள் ஆசிரியர்களுக்கு வணக்கம் செலுத்துவது ஆகியவை நீண்டநாட்களாக மரபில் இருந்து வருகின்றன. இந்நாள் வெண்முரசுக்கான நாளாகவும் அமையலாம் என முடிவெடுத்தோம். ஏனென்றால் வெண்முரசு வியாசனுக்கு அளிக்கப்படும் ஒரு மாபெரும் வணக்கம்தான்.
இந்நாளில் வெண்முரசை புதியதாக வாசிக்கத்தொடங்குபவர்கள் எல்லா ஆண்டும் உள்ளனர். இந்த ஆண்டும் புதியவாசகர்கள் வெண்முரசுக்குள் நுழையவேண்டும் என வாழ்த்துகிறேன். வெண்முரசு வாசகர்களுக்கு மட்டும் ஒரு தனித்தன்மை உண்டு. அவர்களால் வேறேதும் வாசிக்கமுடியாமல் ஆகிவிடுகிறது. வெண்முரசு உருவாக்கும் மாபெரும் பண்பாட்டு- கனவு வெளியில் அவர்கள் வாழத்தொடங்கிவிடுகிறார்கள். ஆகவே அவர்களில் பலர் வெண்முரசையே மீண்டும் மீண்டும் வாசிக்கிறார்கள். நானறிந்து 26 நாவல்களிந் 25000 பக்கங்களையும் நான்கு முறை வாசித்தவர்கள்கூட உள்ளனர். அவர்கள் இந்நாளில் மீண்டும் வாசிக்க ஆரம்பிக்கலாம்.
வெண்முரசை ஒரு புதிய வாசகருக்கு அறிமுகம் செய்வதற்குமான நாள் இது. ஒருவர் தன் வாழ்க்கையின் அலுப்பை, வெறுமையை நீக்கிக்கொள்வதற்கு வெண்முரசு அளவுக்கு இன்று எந்நூலும் உதவுவதில்லை. தன் வாசிப்புத்தன்மையால் அது வாசகரை உள்ளடக்கி வைத்திருக்கிறது. சில ஆண்டுக்காலம் அவர் வாழ்க்கையை நிறைக்கிறது. ஒருவருக்கு வெண்முரசை அறிமுகம் செய்வதென்பது அவர் வாழ்க்கையில் ஒரு புதிய திறப்பை அளிப்பதே.
வெண்முரசு முழுத்தொகுதியும் (26 தொகுப்பு, 25000 பக்கங்கள். 50000 (ஐம்பதாயிரம்) ரூபாய் விலை இப்போது வாங்கக்கிடைக்கிறது. தமிழில் வெளிவந்த நூல்களிலேயே பெரியது, தமிழ் வரலாற்றிலேயே மிகப்பெரிய பதிப்பு முயற்சி. ஆனால் இப்போது வெளிவந்திருப்பது நான்காவது பதிப்பு. உயர்தர தாளில், நல்ல அட்டையுடன் அழகிய சீரான தொகுப்புகளாக. இந்நூல்தொகை இத்தனை விலை இருந்தாலும் தொடர்ச்சியாக விற்றுக்கொண்டிருப்பதற்கான காரணம் இந்நூல்தான் இன்று ஒருவர் தன் பெற்றோருக்கும் மூத்தோருக்கும் அளிக்கத்தக்க மிகப்பெரிய பரிசு என்பதுதான்.
அத்துடன் நம் இல்லத்தில் இத்தகைய பெருநூல் இருப்பதென்பது ஓர் அழகு, மங்கலம். ஒரு வீட்டுக்கு மங்கலம் என்பது நூலகமேதான். வேறொன்றும் அல்ல. நூலகமில்லாத ஒரு வெளிநாட்டு இல்லம் இல்லை – ஏறத்தாழ நாநூறாண்டுகளாக அம்மரபு அங்கே உள்ளது.நாம் இப்போதுதான் அந்தப் பண்பாட்டுக்குள் நுழையத்தொடங்கியுள்ளோம். நாம் உடனடியாக வாசிக்காமலிருந்தாலும் நம் முன் அவை இருந்துகொண்டிருப்பதே ஓர் அழைப்பு. நம் இல்லத்தில் வியாசன் இருப்பதைப்போல.
(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : contact@vishnupurampublications.com Phone : 9080283887)வெண்முரசு- வெவ்வேறு ஒலிநூல்கள். தொடக்கம் வெண்முரசு ஒலிப்புத்தகம்- முதற்கனல் வெண்முரசு ஒலிப்புத்தகம் முதற்கனல் வெண்முரசு முதற்கனல் ஒலிநூல் வெண்முரசு முதற்கனல் ஒலிநூல் வெண்முரசு முதற்கனல் ஒலிநூல் வெண்முரசு இணைய நூல்கள் வெண்முரசு இணையதளம்- முதற்கனல்
வெண்முரசு ஜெயமோகன் இணையப்பக்கம் முதற்கனல்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
