வெண்முரசு விவாதங்கள், ஒரு நினைவு.

அன்புள்ள ஜெ,

வெண்முரசு மிகப்பரவலாக வாசிக்கப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது என்பதைக் காணமுடிகிறது. வெண்முரசு அளவுக்கு விவாதிக்கப்பட்ட இன்னொரு தமிழ் நூலே இருக்கமுடியாது. இதுவரை எழுதப்பட்ட கட்டுரைகள், குறிப்புகளே வெண்முரசு அளவுக்கு இருக்கும். விற்பனையிலும் தொடர்ச்சியான சாதனை என்று சொன்னார்கள். மகிழ்ச்சி. ஆனால் நம் நவீன இலக்கியவாதிகள் பலர் அதை படிக்கவோ பேசவோ இல்லை. ஏனென்றால் அவர்கள் எதையுமே படிப்பதில்லை. அதைப் படிக்காமல் பேசமுடியாது. ஏனென்றால் ஏராளமான வாசகர்கள் படித்திருக்கிறார்கள்.

இந்த வாசிப்புகளில் ஒரு சிறுவட்டம் ஆச்சரியமூட்டுகிறது. அவர்களுக்கு வெண்முரசுக்கும் ஒரு சாதாரண பாலகுமாரன் கதைக்கும் வேறுபாடு தெரியவில்லை. வெண்முரசின் அபாரமான வாசிப்புத்தன்மை, கதையோட்டம் காரணமாகவே இவர்கள் வாசிக்கிறார்கள். ஆனால் தங்களை எந்த வகையிலும் அந்த படைப்பை நோக்கி கொண்டுசெல்வதில்லை. தங்கள் ரசனையை நோக்கி அதை இழுக்கிறார்கள். சினிமா விமர்சனம் போல முடிவு சரியில்லை, ஓட்டம் இல்லை என்றெல்லாம் விமர்சனமும் செய்கிறார்கள். வெண்முரசு போன்ற ஒரு படைப்பை வாசிக்கும் தகுதியை நாம் வளர்த்துக்கொள்கிறோமா, நாம் சரியாகத்தான் வாசிக்கிறோமா என்ற கேள்வியே அவர்களிடமில்லை. அந்த அளவுக்குத் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

அண்மையில் ஒருநண்பர் இந்திரநீலம் வாசித்தார். அதில் சியமந்தகம் அவருக்கு ஒரு கதையம்சமாகவே தெரிந்தது. அதைப்பற்றி ஏன் அப்படிப் பேசுகிறார்கள் என்றே புரியவில்லை. அந்த மணி என்பது உலகியலின் ஆசைகள், வெற்றிகள் அனைத்துக்கும் குறியீடு. ஒவ்வொருவரும் அதனுடன் கொண்டுள்ள உறவு நுட்பமானவகையில் வேறுபடுகிறது என்றெல்லாம் சொன்னேன். அதை கடந்தே கிருஷ்ணனை, அல்லது மெய்யான காதலை அடையமுடியும், காளிந்தியே அதை அடைகிறாள் என்றெல்லாம் விளக்கினேன். அவருக்கு புரியவில்லை.

வெண்முரசு வெளிவந்த நாட்களில் வெண்முரசு விவாதங்கள் என்னும் தளத்தில் தொடர்ச்சியாக ஏராளமான கடிதங்கள் வந்தன. ஒவ்வொரு அத்தியயாத்தையும் நுணுக்கமாக ஆராய்ந்தன அவை. ராமராஜன் மாணிக்கவேல், எம்.பாஸ்கர், த. துரைவேல், ஶ்ரீனிவாஸ், அருணாசலம் மகாராஜன், ஸ்டீபன்ராஜ் குலசேகரன் என ஏராளமானவர்கள் எழுதினார்கள். ராஜகோபாலன், சுசித்ரா என அன்று எழுதிய பலர் இன்றைக்கு புகழ்பெற்றுவிட்டார்கள். அந்த கூட்டுவாசிப்பு வெண்முரசை ஆழமாக வாசித்துப்புரிந்துகொள்ள உதவியது. அந்த தளம் இன்றும் வெண்முரசு வாசிப்பதற்கு மிக உதவியானது.

அ.கிருஷ்ணராஜ்

அன்புள்ள கிருஷ்ணராஜ்,

வெண்முரசு உத்வேகத்துடன் வாசிக்கப்படுகிறது என்பதே நிறைவளிப்பது. எல்லா நிலையில் இருப்பவர்களும் அதை வாசிக்கலாம். அவரவருக்கு உரியவற்றை அது அளிக்கும். அதை வாசிக்க தகுதி என எதுவும் தேவையில்லை. ஒருவரிடமிருக்கும் கேள்வி என்ன, தேடல் என்ன என்பதே அவரது வாசிப்பை தீர்மானிக்கிறது. சரியான வாசிப்பு என ஏதுமில்லை.

வெண்முரசு எழுதிய காலம் நானும் நம் வாசகர்கூட்டமும் ஒரே உணர்வுடன் இணைந்து செயல்பட்ட பொற்காலம், சில தருணங்கள் திரும்புவதில்லை.

ஜெ

 

 அன்னை திரௌபதி  வெண்முரசு: ‘இமைக்கணத்தில் எழுந்த முழுமையின் துளி’ விசித்திர வீர்யன் வியாசர் முதற்கனல் வாசிப்பு- ஜெயராம் வெண்முரசு நிறைவில்.. மானசா பன்னிரு படைக்களம்  கதைமாந்தர் ஜெயமோகனின் ‘வெண்முரசு கிராதம் என்னும் பயணம்- ராமராஜன் மாணிக்கவேல் வெண்முரசு நாவல் வரிசை – அறிமுகக் குறிப்புகள் கம்பராமாயணமும் வெண்முரசும் வெண்முரசென்னும் உறவின் நிறைவு வெண்முரசின் இறுதி வெண்முரசு என்னும் ராட்சச் பிரதி: திரு கார்த்திக் பலராமர் வெண்முரசு வடிவமும் வாசிப்பும்- ஆர்.ராமச்சந்திரன் வெண்முரசு: ‘இமைக்கணத்தில் எழுந்த முழுமையின் துளி’ விசித்திர வீர்யன் வியாசர் முதற்கனல் வாசிப்பு- ஜெயராம் வெண்முரசு நிறைவில்.. மானசா பன்னிரு படைக்களம்  கதைமாந்தர் ஜெயமோகனின் ‘வெண்முரசு கிராதம் என்னும் பயணம்- ராமராஜன் மாணிக்கவேல் வெண்முரசு நாவல் வரிசை – அறிமுகக் குறிப்புகள் கம்பராமாயணமும் வெண்முரசும் வெண்முரசென்னும் உறவின் நிறைவு வெண்முரசின் இறுதி வெண்முரசு என்னும் ராட்சச் பிரதி: திரு கார்த்திக் பலராமர் வெண்முரசு வடிவமும் வாசிப்பும்- ஆர்.ராமச்சந்திரன் வெண்முரசு- தேவை புதியவாசிப்பு- ஆர்.பாஸ்கர் வெண்முரசின் காவிய முறைமை-ஸ்ரீனிவாஸ் புழுக்களின் பாடல்- சரவணக்குமார் நீர்சுடர் ஒளியில் திருதராஷ்டிரர் காவியம் வண்ணக்கடலும் நீலமும் கனவிருள்வெளியின் திசைச் சுடர் , கிராதம்- அருணாச்சலம் மகாராஜன் வெண்முரசின் தரிசனம்- மதுசூதனன் சம்பத் வெண்முரசு வாசிப்பு முறை – ராஜகோபாலன் வெண்முரசின் காவிய தருணங்கள்:–ராஜமாணிக்கம் மழைப்பாடல் வாசிப்பு – தாமரைக்கண்னன், பாண்டிச்சேரி வெண்முரசில் தந்தையர்- ரகு வெண்முரசும் இந்தியாவும்- பிரபு மயிலாடுதுறை வெண்முரசின் கட்டமைப்பு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 07, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.