சென்னையில் ஒரு வாசிப்புக் குழுமம்

வணக்கம் ஜெ,

உங்களை சென்னையில் குமரகுருபரன் விருது விழாவில் சந்தித்தல் பெருமகிழ்சி. உங்களின் எழுத்துக்கள் என்றுமே செயலின் ஊக்கம். எழுதின் மூலமாக அனைத்து வழிகாடலுக்கும் நன்றி.

சென்னை போன்ற பெருநகரில், வேலை சார்ந்து குடிபெயர்ந்த இளைஞர்கள் பல்லாயிரம். வேலையின் தீவிரம், நிறுவனத்தில் அழுத்தம் , கிடைக்கும் வார இறுதிகளிலும் கேளிக்கை , பொழுதுபோக்கு என நாட்கள் தள்ளி, சமூக வலைதள வம்புகளில் தலையை விட்டு, நேரமே இல்லை என புலம்பும் இளைஞர்கள் மிகுதி.  வாசிப்பில் ஆர்வம் மிக மிக அபூர்வம்.

ஒரு செயலூகமாக முன்னெடுபாக, வாசிப்பில் ஆர்வம் உள்ள இளைஞர்கள், அனைத்து சனிக்கிழமைகளிலும் அண்ணா நகர் டவர் பார்க்கில் கூடி, காலை 6.30 முதல் 9.30 முதல் வாசித்து, பின் நண்பகல் வரை புத்தகங்கள் பற்றி உரையாடுகிறோம்.   ‘ Tower Reads’ என்ற இந்த வாசிப்பு குழுமம் திரு.கிருஷ்ணா அவர்களால் முன்னெடகபட்டு, 90 வாரங்களை தொட்டு தொடர்ந்து நடக்கிறது. இங்கு குறிப்பிட்ட கூறும்படியாக, தீவிர தமிழ் இலக்கிய புத்தகங்கள் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. புதிதாக சேரும் உறுப்பினர்களுக்கு , உங்களது ‘ அறம் ‘ என எழுத்தாளர்களின் சிறந்த, எளிய படைப்பினை அறிமுகப்படுதி, இலக்கிய வாசிப்பை முன்னெடுகிறோம்.

இங்க கூடும் சராசரி இளைஞர்களின் வயது 30கும் குறைவே. பூங்காவில் நடக்கும் முதியோர்களுக்கு நாங்கள் இன்றும் ஏலியன்கள். அவ்வபோது வந்து தங்கள் உலகியல் சாதனைகளை ஓதி விட்டு அறிவுரை கூறிவிட்டு செல்வார்கள். நாங்களும் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. 

எழுத்தாளர்கள் செல்வேந்திரன், மனுஷ், லக்ஷ்மிஹர் எங்களை சந்தித்து , உரையாடி ஊக்கமளித்தனர்.

நான் இந்த குழுமம், தொடர் வாசிப்பு , உரையாடல்கள் மூலம் அறிந்த சில புரிதல்கள், 

1. வாசித்ததை விவாதிக்கும் போது, கற்பனை மற்றும் புரிதல் விரிகிறது. அவர்வர்கள் தங்களுக்கு உகந்தவாறு நூல்களை பற்றி தொகுத்து கொள்ள உதவுகிறது.

2.  நூல் அறிமுகம், எழுத்தாளர் அறிமுகம் எளிதாக வசப்படுகிறது.

3. வாரம் முழுக்க கடும் மூளை/தொழில்நுட்ப உழைப்பில் உழன்று சோர்வுக்கையில், வார இறுதியில் சந்திக்கும்  உற்சாகமும், வாசிக்க தன்முனைப்பு உருவாகிறது.

4. இலக்கியம் படித்தாலும் அந்நியமாக உணரும் நிலை வாய்க்காமல், சமூக நட்பு, குழு செயலூகம் கிடைக்கிறது.

இன்ஸ்டாகிராம் பக்கம்: https://www.instagram.com/towerreads?igsh=MWhkazZkZzBmaGZldQ==

உங்களது வாழ்த்து  எங்களை போல் இளம் வாசகர்களுக்கு விலைமதிப்பற்றது.

நன்றி,

கவின் 

வாழப்பாடி, சேலம்.

kavin.selva@outlook.com
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 26, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.