நானொரு மலர்த்தோட்டம் வைத்திருக்கிறேன்குருதியை நீராக்கிகனவுகளை வித்தாக்கிவளர்த்தேன்ஒவ்வொரு மலரும்என் இதயத்தின் பாடல்ஒவ்வொரு மணமும்என் ஆன்மாவின் மூச்சு தோட்டத்தில் சிலர்அவ்வப்போது எட்டிப் பார்ப்பதுண்டுஅவர்களின் கண்கள் வியப்பில் மலர்கின்றனஅவர்களிடம் படிந்த மணம்வான்வரை செல்வதாகச்சொல்கிறார்கள் இந்தத் தோட்டம்வாழ்க்கையின் ரகசியத்தைப் பேசுவதாகபத்திரிகையில் பேசப்பட்டது அது ஒன்றும் ரகசியம் அல்லமலர்களும் மனிதர்களும்ஒரே மண்ணில் பிறந்தவை,துக்கத்திலும் மகிழ்ச்சியிலும்ஒன்றாக நெய்யப்பட்டவை.ஆனால்மலர் ஒரு கணத்தில் வாடுகிறதுமனிதன் தன் துக்கத்தின் கண்ணாடியில்மகிழ்ச்சியின் நிழலைத் தேடுகிறான்
Published on May 30, 2025 23:13