இன்றைய கவிதைநண்பனுக்கு அனுப்பினேன்கவிதை போகவில்லைஃபோனில் அழைத்தேன் ’கார் ஓட்டிக்கொண்டிருக்கிறேன்கவிதையிருந்தால் படி’ என்றான் மனையாள் பக்கத்தில் இருந்தாள்அவளருகில் இருந்துஎன் எழுத்தைக் கடை விரிப்பதுசாலை நடுவேமுஷ்டி மைதுனம் செய்வது போலஆனாலும்இன்றைய கவிதைகாதல் கவிதை அல்ல,தத்துவக் கவிதைஅச்சம் உதறிப் படித்தேன் ’மகிழ்ச்சியின் உச்சத்திலோஎல்லையற்ற துக்கத்திலோஇருந்தால்தான் கவிதைபிறக்கும்’ என்றாள்வாழ்வில் ஒரு புத்தகமும்படிக்திராத என் மனையாள்
Published on May 31, 2025 00:22