சிறுகதைகளின் வசந்தம் – கடிதம்
நிறைவிலி சிறுகதை
ஜெ
புனைவுக்களியாட்டுச் சிறுகதைகள் ஒரு பெரிய மழைபோலக் கொட்டி ஓய்ந்தன. 136 கதைகள் ஓராண்டில் என்பது ஒரு திக்குமுக்காடச்செய்யும் நிகழ்வு.நம்மில் இலக்கிய வாசகர்கள்கூட வாழ்நாளில் மொத்தமாக அவ்வளவு கதைகளைத்தான் வாசித்திருப்பார்கள். நமது படைப்பாளிகள் பலரும் வாழ்க்கை முழுக்க அவ்வளவுதான் எழுதியிருப்பார்கள். அத்தனை கதைகள்.
ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு களம். ஒவ்வொரு சுவை. நையாண்டியும் பிரியமும் கலந்த கதைகள். திகில் கதைகள். சரித்திரக்கதைகள். உருவகக்கதைகள். பலவகையான சிறுகதை உத்திகள். உண்மையில் ஒரு சிறுகதையை வாசித்து ரசித்து அதன் ஆழத்திற்குப் போவதற்குள் அடுத்த சிறுகதை. ஆகவே பல கதைகளை வாசிக்கவே இல்லையோ என்று இப்போது படுகிறது.
புனைவுக்களியாட்டுக் கதைகள் அவ்வளவு எண்ணிக்கையில் வெளிவந்தமையால் அவற்றைப் பற்றி அறிந்திராதவர்கள் மிகக்குறைவு. ஆனால் எல்லா கதைகளையும் வாசித்தவர்கள் சிலர்தான். அவர்களும்கூட ஒரு சில கதைகளையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.
136 கதைகளில் 80 கதை பிடித்திருக்கிறது என்று ஒரு நண்பர் சொன்னார். சரி என்னென்ன கதை சொல் என்று கேட்டேன். அவர் பட்டியல் போடுவதற்குள் குழம்பி தவித்தார். அவர் பட்டியலிட்ட பிறகு மிஞ்சிய கதைகளில் ஒவ்வொன்றாகக் கேட்டேன். எல்லாமே அற்புதமானவை என்றார். இதுதான் நிலைமை. எல்லா கதைகளும் நல்லவை என்று சொல்ல முடியாது. ‘சூஸி’ ஆகவேண்டும் அல்லவா? ஆகவே ஒரு நம்பரைச் சொல்கிறார்கள்.
நான் சொன்னேன். அந்தக் கதைகளில் மிகச்சாதாரணமானது என்று சொல்லப்படும் ஒரு கதையை மட்டும் ஒருவர் எழுதியிருந்தால் அவரை நல்ல சிறுகதையாசிரியர் பட்டியலில் சேர்ப்போம். பல பட்டியல்களில் உள்ள எழுத்தாளர்களின் பெஸ்ட் அந்த தரம் வரை வரும் சிறுகதைகள் அல்ல.
நண்பரிடம் அப்படி ஒரு சாதாரணமான கதையை சொல்லும்படிச் சொன்னேன். அவர் யோசித்து ஒவ்வொரு கதையாக பார்த்து இந்தக்கதையைச் சொன்னார். நிறைவிலி. தலைப்பு ஞாபகமில்லாததனால்தான் அவர் நல்ல கதை அல்ல என்று சொன்னார். கதையை அதன்பிறகு படித்தோம். ‘நீ அந்த பாத்திரத்தை நிறையவே விடக்கூடாது’ என்ற வரியில் ஒரு மாதிரி ஒரு நடுக்கம் உருவானது. மகத்தான சிறுகதை. மோட்டிவேஷனல் கதைகள் பல கண்ணில் படுகின்றன. அவற்றில் உச்சமான ஒரு கதை இது.
வசந்தகாலத்தில் நாம் பூக்களைப் பார்ப்பதில்லை. ஒட்டுமொத்தமாக பூக்காலத்தையே பார்க்கிறோம். சில சிறிய மலர்கள் பேரழகு கொண்டவை. அவற்றை நின்று பார்த்தாகவேண்டும்.
நன்றி ஜெ
சா. மாதவன்
குமரித்துறைவி வாங்கவான் நெசவு சிறூகதைத்தொகுப்பு வாங்கபத்துலட்சம் காலடிகள் சிறுகதைத்தொகுப்பு வாங்கதங்கப்புத்தகம் சிறுகதைத்தொகுப்பு வாங்கஆயிரம் ஊற்றுகள் சிறுகதைத்தொகுப்பு வாங்கவாசிப்பின் வழிகள் வாங்கஆனையில்லா சிறுகதைத்தொகுப்பு வாங்கஐந்து நெருப்பு சிறுகதைத்தொகுப்பு வாங்கதேவி சிறுகதைத்தொகுப்பு வாங்கஅந்த முகில் இந்த முகில் – நாவல் வாங்கஎழுகதிர் சிறுகதைத்தொகுப்பு வாங்கமுதுநாவல் சிறுகதைத்தொகுப்பு வாங்கபொலிவதும் கலைவதும் சிறுகதைத்தொகுப்பு வாங்கபின்தொடரும் நிழலின் குரல் அச்சுநூல் வாங்கஇருகலைஞர்கள் சிறுகதைத்தொகுப்பு வாங்கமலை பூத்தபோது சிறுகதைத்தொகுப்பு வாங்கஇலக்கியத்தின் நுழைவாயிலில் அச்சு நூல் வாங்கநத்தையின் பாதை அச்சு நூல் வாங்கமைத்ரி நாவல் வாங்கஆலயம் எவருடையது ஆன்லைனில் வாங்கஇந்துமெய்மை ஆன்லைனில் வாங்கசாதி – ஓர் உரையாடல் ஆன்லைனில் வாங்கவணிக இலக்கியம் ஆன்லைனில் வாங்கஈராறுகால் கொண்டெழும் புரவி ஆன்லைனில் வாங்ககதாநாயகி ஆன்லைனில் வாங்கஒருபாலுறவு ஆன்லைனில் வாங்கஅனல் காற்று ஆன்லைனில் வாங்கவெண்முரசு – நீர்ச்சுடர் (23) வாங்கஞானி ஆன்லைனில் வாங்கநான்காவது கொலை ஆன்லைனில் வாங்கவிசும்பு ஆன்லைனில் வாங்கவெண்முரசு – களிற்றியானை நிரை (24) வாங்க
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

