வல்லினம், கீழை இலக்கிய உலகம்.
அன்பான ஜெ, நலமா?
மே மாத வல்லினம் பதிவேற்றம் கண்டது. இந்த இதழில் 3 சீன சிறுகதைகளின் மொழியாக்கங்களுடன் சிறுகதைகளும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இதழின் இணைப்பு:
வல்லினம் மே இதழ்ஜெ, ஜூன் 1 ஆம் திகதி முக்கோண கதைகள் எனும் நிகழ்ச்சி செய்கிறோம். என் நினைவில் மூன்று இன எழுத்தாளர்களும் இணைந்து மலேசியாவில் ஓர் இலக்கிய நிகழ்ச்சியை முன்னெடுத்ததில்லை. வல்லினம் அம்முயற்சியில் இறங்கியுள்ளது. எங்களில் அனைத்து சிறந்த திட்டங்களுக்கும் நீங்கள் முதன்மை காரணியாக இருப்பீர்கள். நான் அதை எப்போதும் ஆசிரியரின் ஆசி என்றே கருதுவேன்.
எஸ்.எம். ஷாகீரை விஷ்ணுபுரம் விழாவுக்கு அழைத்ததில் அனைத்தும் தொடங்கியது. அ. பாண்டியன் அவர் சிறுகதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்யத் தொடங்கினார். அந்த நிகழ்ச்சியில் ஷாகீருடன் எனக்கு ஏற்பட்ட நட்பின் தொடர்ச்சியாகக் கலந்துரையாடல் ஒன்றை மலேசியாவில் ஏற்பாடு செய்தோம். அதில்தான் ஃபுளோரன்ஸ் அவர்கள் தொகுத்த சீன சிறுகதைகளின் மலாய் மொழியாக்கம் கிடைக்கப் பெற்றோம். தொடர்ந்து ஃபுளோரன்ஸ் சம்மதத்துடன் சீன சிறுகதைகளை மலாயில் இருந்து தமிழில் மொழியாக்கும் பணிகள் நடந்தன. இப்படி உங்களில் இருந்து உருவான ஒன்று விரிந்து பெரும் விழாவாக பரிணமித்துள்ளது. இதில் தமிழ்ச் சிறுகதைகளின் மலாய் மொழியாக்கமும் ஷாகீர் நடத்தும் பதிப்பகத்தின் வழியாக நூலுரு பெறுகிறது.
https://vallinam.com.my/version2/?p=10195 : முழு தகவல்
ஆக, தமிழ், மலாய், சீன எழுத்தாளர்கள் ஒன்றிணையும் நிகழ்ச்சியாக இது உருமாறியுள்ளது. மூன்று நூல்களின் வெளியீட்டுடன் மூன்று அரங்குகளும் இடம்பெறும். வாய்ப்பிருப்பின் தங்கள் தளத்தில் நிகழ்ச்சி குறித்து வெளியிடவும்.
அன்புடன்
ம.நவீன் / M.Navin
No Tel : 0163194522
web site : www.vallinam.com.my
blog : www.vallinam.com.my/navin/
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

