அன்புள்ள ஜெ
ஞாநி என் பிரியத்துக்குரியவர். நெருக்கமாகப் பழகும் வாய்ப்பும் அமைந்துள்ளது. இன்று தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியத்தில் அவர் பற்றிய பதிவைப் படித்தேன். ஒரு முழு வாழ்க்கையையே சுருக்கமாக எழுதியிருக்கிறார்கள். இத்தனை முழுமையான பதிவு ஞாநி போன்று எந்த தனிப்பட்ட லாப நோக்கமும் இல்லாமல் பாடுபட்ட ஓர் அறிவுஜீவிக்கு அளிக்கப்படும் பெரிய கௌரவம். இதற்குத்தான் இத்தகைய கலைக்களஞ்சியங்களை இலக்கியவாதிகள் நடத்தவேண்டும் என்கிறோம்
நன்றி
கிருஷ்ணசாமி மகாதேவன்
ஞாநி
அன்புள்ள ஜெ
நான் மறைந்த எழுத்தாளர் எஸ்.வி.வி. அவருடைய கதைகளை இளமைக்காலத்தில் வாசித்தவன். உங்கள் தளத்தில் அவரைப்பற்றிய குறிப்பை பார்த்துவிட்டு தமிழ்விக்கி பதிவையும் பார்த்தேன். விரிவான முழுமையான பதிவு. நகைச்சுவை எழுத்தில் கல்கி, தேவன், துமிலன், நாடோடி என பலருக்கும் முன்னோடி எஸ்.வி.வி. தான் என்னும் மதிப்பீடும் கச்சிதமான ஒன்று.
தமிழ்விக்கி போன்ற முயற்சிகள் இல்லை என்றால் நம் மரபே அப்படியே மறைந்துபோய்விட்டிருக்கும்.
எம்.சந்தானகிருஷ்ணன்
எஸ்.வி.வி
Published on April 15, 2025 11:31