01
அழுகையை நிறுத்தி
உறக்கத்தில் புன்னகைக்கிறது
கைகளை வீசி
கால்களை உதைத்து
நெடுந்தூரம் வந்தடைந்த
இளைப்பாறலின் மூச்சொலியோடு
படுக்கையில் புரள்கிறது.
சிறகு முளைத்த பதற்றத்தில்
எழுந்து பறக்கும்
வண்ணத்துப்பூச்சியை
அழைத்து வந்த
கனவின் பூந்தோட்டத்தில்
தாயின் முலை தேடி
ஊர்கிறது
பூ.
02
தெய்வம் உண்டோ சொல்
தெய்வம் உண்டோ சொல்
சொல்லில் உண்டே தெய்வம்
சொல்லில் உண்டு தெய்வம்.
The post கைகளை வீசி first appeared on அகரமுதல்வன்.
Published on January 13, 2025 09:25