நாதஸ்வர மேதை காருகுறிச்சி அருணாசலம் குறித்து இசைவிமர்சகர், ஆய்வாளர் லலிதா ராம் எழுதிய காருகுறிச்சியைத் தேடி நூலின் வெளியீட்டு விழா நாளை மாலை நடைபெறுகிறது. ( டிசம்பர் 28 ).
சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்

இசையுலக இளவரசர் ஜி.என்.பி, பேரலையாய் ஒரு மென் ஷட்கம் என இரண்டு முக்கிய நூல்களை லலிதா ராம் எழுதியிருக்கிறார். நான் அவரது கட்டுரைகளை விரும்பி வாசிக்கக் கூடியவன். இசையின் வரலாறு குறித்தும் நிகரற்ற இசை ஆளுமைகள் பற்றியும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

நூலை ஜீரோ டிகிரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
Published on December 27, 2024 06:24