கோவைமணி புதிய நூல்கள்

[image error]ஐயா, வணக்கம்.  

நலம், தங்களின் பயணம் எப்படி?  தங்களைச் சந்தித்த வேளை நல்ல வேளை.  அதனால்தான் என்னிடம் முடங்கியிருந்த எழுத்துருக்கள் மின்னூலாக வெளிவந்திருக்கின்றன.  அவை தங்களின் பார்வைக்கு… 

அமேசான் கிண்டிலில் (KDP – Kindle Direct Publishing) என்னுடைய பின்வரும் நூல்கள் வெளியாகியுள்ளன. இந்நூல்களின் விவரங்களை

 https://kovaimani-tamilmanuscriptology.blogspot.com/2024/11 

இல் சென்று காணலாம். நூல் பெறுவோர் அமேசான் வலைத்தளம் சென்று அங்கு மேலது இணைப்பில் கொடுக்கப்பெற்றுள்ளவற்றில் கொடுக்கப்பெற்றுள்ள நூலுக்கான குறியீட்டெண் (ASIN)ணை உள்ளீடு செய்து உரிய முறைப்படி பெற்றுக்கொள்ளலாம்.

அக்னிப்பூ, அமுதரஸ மஞ்சரி, ஆசிரியர் மங்கலங்கிழார் வாழ்வும் வாக்கும், இதழ்ப் பதிப்பு நூல்கள் (பகுதி 1), இதழ்ப் பதிப்பு நூல்கள் (பகுதி 2), இரகுநாதத் தொண்டைமான் காதல், இலக்கிய இதழ்களும் நூல்களும், உதயத்தூர் புலைமாடத்தி வரத்து, ஊமைத்துரை சண்டை, கடைமருந்து 64, கன்னிக் குன்று, காதல் வாசல், காதல் வீணை, காலைக் கதிரழகு, கோவை மனம், கோவைக் களஞ்சியம், கோவைச் சுவடுகள் பகுதி 1, கோவைச் சுவடுகள் பகுதி 2, கோவைச் சுவடுகள் பகுதி 3, கோவைச் சுவடுகள் பகுதி 4, கோவைச் சுவடுகள் பகுதி 5, கோவைச் சுவடுகள் (பகுதி 6), கோவைத் தூறல் (சிறுகதைத் தொகுப்பு 1), கோவைமணி 60, சித்த மருத்துவத்தில் நாடி, சிறுத்தொண்டன் கதை, சின்னத்தம்பி கதை, சுவடிநூல் ஆய்வுகள், சுவடியியல் ஆய்வுகள் பகுதி 1, சுவடியியல் ஆய்வுகள் பகுதி 2, சுவடியும் நானும், செம்புலப்பெயர் நீர் (ஐக்கூக் கவிதைகள்), தமிழில் கதைப்பாடல் சுவடிகள் தொகுதி 1, தமிழில் கதைப்பாடல் சுவடிகள் தொகுதி 2, தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடிகள், திருக்குருகூர்த் திருப்பணிமாலை, தேவமாதா அம்மானை, தேன் தமிழ், தொட்டில்மண் வழக்காறுகள், நாவான் சாத்திரம், பதிப்புலகத் தூண்கள், பருவ இதழ்ச் சுவடிப்பதிப்புகள், பல்லவராயன் உலா, புதிய மனிதன், புறநானூறு உணர்த்தும் வாகைத்திணை, பூட்டாதிருக்கும் வாசல், முத்துநாச்சி சண்டை, மேகக் கண்ணீர், வடிவுடையம்மன் பிள்ளைத்தமிழ், விழித்தெழு.

இத்தகவலை தங்களின் நண்பர்களுக்குப் பகிர வேண்டுகின்றேன்

அன்புடன்

உங்களின்

 கோவைமணி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 05, 2024 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.