ஒருமுறை அல்ல, பலமுறை சொன்னான் விஷால். வைதேகியை விவாகரத்து செய்து விடுங்கள். அது பற்றி பெருமாள் அவனிடம் விரிவாக விளக்கியும் விஷாலுக்கு பெருமாளின் நிலைப்பாடு புரியவில்லை. பிறகு அது ஒரு துன்பமாகப் போகவே நட்பைத் துண்டித்தான். மிகவும் சுருக்கமாகச் சொன்னால், பெருமாளைப் போன்ற அதிர்ஷ்டக்கார எழுத்தாளன் இந்த உலகத்திலேயே இல்லை. எழுத்துக்கு ஆதாரமான விஷயம் என்ன? கட்டுப்பாடற்ற சுதந்திரம். இந்த விஷயத்தில் பெருமாளைப் போல் சுதந்திரத்தை அனுபவிப்பவன் யாருமேயில்லை. இதைப் படிப்பதை ஒரு கணம் நிறுத்தி விட்டு ...
Read more
Published on September 22, 2024 10:24