டாக்டர் சாமர்வெல் பற்றிய இந்தக்கட்டுரையை நண்பர் இணைப்பனுப்பியிருந்தார். அக்காலகட்டத்தில் மலையேற்றத்துக்கு ஒலிம்பிக் போட்டியில் இடமிருந்ததும் அதில் டாக்டர் சாமர்வெல் விருதுபெற்றிருப்பதும் ஆச்சரியமளிக்கிறது. சாமர்வெல்லின் மகனுக்கு இப்போது 80 வயது. தந்தையைப்பற்றிய அரிய நினைவுகளுடன் இருக்கிறார்.
[image error]டாக்டர் சாமர்வெல்
சாமர்வெல் பிரித்தானியராக இருந்தாலும் இந்தியா பெருமையுடன் நினைவுகூரவேண்டியவர். தமிழில் சாமர்வெல் பற்றி ஒரு நல்ல நூலை எவராவது எழுதினால் நிறைவாக இருக்கும். லண்டன் வாழ் நண்பர்கள் எவராவது இதற்கான முயற்சியை எடுக்கலாம். இங்கே இருப்பதை விட அங்கே எளிதாக தகவல்கள் கிடைக்கும்.
இங்கே லண்டன் மிஷன் அமைப்பு சி.எஸ்.ஐயுடன் இணைந்தபின்னர் பழையவர்களின் வரலாறும் தகவல்களும் கிட்டத்தட்ட மறக்கப்பட்டுவிட்டன. முதியவர்கள் சிலர் உயிருடனிருக்கலாம்.தேடிப்பிடிக்கவும் எழுதவும் இதுவே கடைசித்தருணம் என்று தோன்றுகிறது.
சாமர்வெல்
ஓலைச்சிலுவை
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Published on May 25, 2012 11:30