01
இறகுகள்
மண்டிக்கிடக்கும்
பாழ் கிணற்றுள்
மிதக்கும்
வானின் பிம்பம்.
02
பறவைகள் வந்தமரா
முதுமரத்தின் கீழே
வீற்றிருக்கும்
சித்தமிழந்த
கொடுநிழல்.
03
மரமெங்கும்
சிறகுலர்த்துகின்றன
பறவைகள்
நிதமும்
இறகுகள் உதிரும்
இலையுதிர்காலம்
பூமிக்கு.
The post இறகு first appeared on அகரமுதல்வன்.
Published on June 05, 2024 10:05