எனக்கு ஒரு பத்து வயது ஆகும் போதே நான் ஒரு வித்தியாசமான மனிதன் என்று தெளிவாகத் தெரிந்து விட்டது. அது பற்றியெல்லாம் விரிவாக என் நாவல்களில் எழுதி விட்டேன். மீண்டும் இங்கே எழுத வேண்டிய அவசியம் இல்லை. என் பள்ளித் தோழனான யோகநாதன் இப்போதும் என் தொடர்பில் இருக்கிறான். அவனைக் கேட்டால் சொல்லுவானாக இருக்கும். ஆறு வயதிலிருந்து பதினெட்டு வயது வரை என்னை மிக நன்றாக அறிந்தவன். இங்கேதான் வளசரவாக்கத்தில் சீனி வீட்டுக்குப் பக்கத்துத் தெருவில் வசிக்கிறான். ...
Read more
Published on June 02, 2024 06:13