01
வாள் வீழும் தலை
என்னுடையதாகட்டும்
பீடத்தில் பெருகும் குருதி
என்னுடையதாகட்டும்
தெய்வத்தின் பசிக்கு
பலியாகும்
கொடை என்னுடையதாகட்டும்.
அபயம் அருளும்
இறையே உனக்கு
உபயம் உதிரம்
உதிர உபயம்.
02
மலையின் உச்சியில் தனித்த பறவை
பெரும் பகலை உதிர்க்கிறது
இரவின் கிளையில் வெறித்த பறவை
தினம் ஒளியை மலர்த்துகிறது.
03
வரலாற்றின் காலடிகளை
இந்தப் புழுதியை விடவும்
சுமப்பவர்
எவர்?
சூறைக்காற்றில் பறந்த புழுதி
மறுபடி பூமியில் அமர்ந்தது.
The post அன்றில் first appeared on அகரமுதல்வன்.
Published on June 01, 2024 11:26