01
அசையாத சுடரின் நீளம்
இருளிலும் பெரிது
இறுதிக் கனலில் திரியெரிய
கருகிய ஒளியின் வாசம் அசைந்து
அழியும்
அசையா அச்சுடர்.
02
மலையில் தரித்து நிற்கும் காலத்தை
மேகங்கள் அசைக்கும்
சந்திர ஒளியில் தவமிருக்கும் கூழாங்கல்லின்
தியானத்தை
ஆற்றின் கரையில் நீரருந்தும் மந்தைகள்
கலைக்கும்
அகவும் மயில்களில் அசையும் மழையை
வெயில் மறுக்கும்
அழகின் இனிமையென
முட்செடியின் பூ மலரும்.
மலரும் பூ மலரும்.
03
இரவைப் போலவே
வீடு திரும்புகிறவன் நான்
உறங்காமல் உதயமாகும்
வானொளியும்
உடைந்து உமிழும்
பிரளயத்தின் எரிமலையும்
நான்.
இப்படித்தான் தத்தளிப்பேன்
நான்.
The post மலரும் பூ மலரும் first appeared on அகரமுதல்வன்.
Published on May 30, 2024 08:48