கொஞ்சம் மன அமைதியை உங்களுக்கு நீங்கள் நம்பும் இறைவன் அருளட்டும்

 அன்பிற்குரிய சார்,

வணக்கம்மிகவும் பரபரப்பாகவும் பதட்டத்துடனுமாகவே உங்களைப் பார்க்க முடிகிறதுஒன்று தெரியுமா,எங்கள் இளைய தோழர்களிடத்தில், உங்களைப்போல இயக்கத்தின்மீது விசுவாசமாக இருக்க வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறேன்.சிரிக்காதீர்கள்இது சத்தியம்எத்தனை அசிங்கப்பட்டாலும் தமிழ்நாட்டிற்கு திரும்பத் திரும்ப நீங்கள் வருவதாக பலர் கிண்டல் செய்யலாம்ஆனால்,உங்கள் மீது எனக்கு இருக்கும் ஒரே ஒரு மரியாதைக்கான ஒரே ஒரு காரணம் இதுதான்எவ்வளவு அசிங்கப் பட்டாலும் இயக்கத்தைக் கட்ட வேண்டும் என்ற உங்களது இயக்கத்தின் மீதான உங்களது விசுவாசம் இருக்கிறது பாருங்கள்சத்தியமாகச் சொல்கிறேன் கற்றுக் கொள்ள முயற்சிக்கிறேன்கிட்டத்தட்ட 19.04.2024 வரை இஸ்லாமியர்கள் மீது இவ்வளவு வன்மத்தைக் கக்கவில்லை நீங்கள்முகமது சமியை உங்களது சகோதரராக விளிக்குமளவு கொஞ்சம் பக்குவம் இருந்தது20 ஆம் தேதி நீங்கள் நாக்பூரிலே தங்கி RSS தலைவர்களை சந்தித்ததாக அய்யா பீட்டர் அல்போன்ஸ் கூறுகிறார்அதன் பிறகுதான் இந்துப் பெண்களின் தாலி குறித்தெல்லாம் கதறத் தொடங்குகிறீர்கள்நீங்கள் தாலிகுறித்து பேசியதால் ஒன்று சொல்கிறேன்தமிழகத்தில் தாலியறுத்தான் சந்தை என்று ஒரு ஊர் இருப்பதாக உங்களுக்குத் தெரியுமா சார்ஏன் அந்த ஊருக்கு அந்தப் பெயர் வந்தது என்று கத்தாமல் கூச்சலிடாமல் விவாதிக்கலாமா சார்இதை எல்லாம்கூட மன்னிக்கலாம் சார்ஆனால் காங்கிரஸ் ஏதோ இந்தியச் சொத்துக்களை எல்லாம் இஸ்லாமியர்களுக்கு கொடுத்து விடுவார்கள் என்று கூறுகிறீர்களேஅதைத்தான் மன்னிக்க முடியாதுநெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்,நீங்கள் மசூதியை இடித்தது உங்கள் ஆட்சியிலாநீங்கள் இடிப்பீர்கள்அவர்கள் வேடிக்கைப் பார்ப்பார்கள் அவ்வளவுதான்இப்போதுகூட சனாதனம் குறித்து பேசியதற்காக உதயநிதிக்கு கண்டிப்பாக தண்டனை வழங்க வேண்டும் என்று ரேவந் ரெட்டி கூறுகிறார்இருவரோடும்தான் எங்களது போராட்டம்சனாதனம் என்பது மேல், கீழ் பாகுபாடுகடுமையாக எதிர்ப்போம்கொஞ்சம் மன அமைதியை உங்களுக்கு நீங்கள் நம்பும் இறைவன் அருளட்டும்நன்றிஇப்பவும் அன்புடன்,இரா.எட்வின்23.04.2024
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2024 00:56
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.