புத்தகப் பரிந்துரை –1
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் என்ன புத்தகங்களை வாங்கலாம் என வாசகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள்.
இவை இன்றைய எனது பரிந்துரைகள்.
பதிப்பாளர் பெயர் குறிப்பிட்டுள்ளேன். அரங்கு எண் தெரியவில்லை.

நினைவின் குற்றவாளி – கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன், வேரல் பதிப்பகம் ₹130
( நகுலன் பற்றிய நினைவுகளும் ஆழ்ந்த வாசிப்பு அனுபவக்குறிப்புகளும் கொண்டது. )

கதை இல்லாதவனின் கதை- மலையாளம்- எம். என். பாலூர் ( கதகளி கலைஞரின் வாழ்க்கை நினைவுகளைச் சொல்லும் அற்புதமான படைப்பு. )தமிழில்: த. விஷ்ணுகுமாரன்- சாகித்திய அகாடெமி ₹340
பழந்தமிழ் வணிகர்கள் by கனகலதா முகுந்த் தமிழில்: எஸ்.கிருஷ்ணன் கிழக்கு பதிப்பகம் விலை ரூ 185
(சங்க காலத்தில் ஆரம்பித்து தமிழ் வணிகம் காலப்போக்கில் என்னென்ன மாற்றங்களை அடைந்துள்ளது என்பதை ஆராயும் நூல்.)


தென் காமரூபத்தின் கதை- இந்திரா கோஸ்வாமி – அஸ்ஸாமின் கடந்தகாலத்தைச் சொல்லும் சிறப்பான நாவல். இந்திரா கோஸ்வாமி ஞானபீடம் பரிசு பெற்றவர், தமிழில்:: அ. மாரியப்பன் சாகித்திய அகாடெமி ₹175

திருப்புடைமருதூர் ஓவியங்கள் – சா. பாலுசாமி, (தாமிரபரணி போர் பற்றிய அழகிய வண்ண ஒவியங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்ட நூல்.) மிக நேர்த்தியாக வெளியிட்டிருக்கிறார்கள்- செம்மொழி நிறுவனம். சென்னை. ₹3,000

அத்தங்கி மலை – பி. அஜய் ப்ரசாத்- தெலுங்குச் சிறுகதைகள் -தமிழில்:: க. மாரியப்பன் : எதிர் வெளியீடு ₹250
ஜனவரி 7/ 2024.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
