புத்தக வெளியீட்டு விழா.
எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டம்.
எனது அழைப்பை ஏற்று வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.
நூல்களை வெளியிட்டுச் சிறப்பித்த தோழர் எஸ்.ஏ.பெருமாள். இயக்குநர் ராஜ்குமார், திரு. ஆறுமுகச்சாமிக்கு அன்பும் நன்றியும்
விழாவில் உரையாற்றியவர்கள் குறித்த நேரத்திற்குள் நூல் குறித்த சிறப்பான அறிமுகத்தை வழங்கினார்கள்.
அரங்கில் நிறைய இளைஞர்களைக் காண முடிந்தது மகிழ்ச்சி அளித்தது.
புத்தகங்களை நேர்த்தியாகத் தயாரித்து அளித்த மணிகண்டனுக்கும். நிகழ்வைச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து பதிவேற்றம் செய்துள்ள ஸ்ருதிடிவி கபிலன் மற்றும் சுரேஷிற்கு மிகுந்த நன்றி.
நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த அன்புகரன், சண்முகம், குரு, கபிலா காமராஜ். அகரமுதல்வன், உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
எனது பணிகளில் தோள் கொடுத்து நிற்கும் அன்புமகன் ஹரி பிரசாத்திற்கும், விழாவைத் திட்டமிட்ட நாள் முதல் அனைத்து ஒருங்கிணைப்புகளையும் மேற்கொண்ட அன்பு மனைவி சந்திரபிரபாவிற்கும், இளைய மகன் ஆகாஷிற்கும் நிறைந்த அன்பும் நன்றியும்.



















புகைப்படங்கள்
நன்றி : ஸ்ருதி டிவி.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
