முதல்முறையாகக் குழம்புகிறேன். நான்கு பேர் – சீனி, வினித், மற்றும் இரண்டு நண்பர்கள் – உல்லாசம், உல்லாசம்… நாவல் தேறாது என்று சொல்லிவிட்டார்கள். அதாவது, ஒரு பிரமாதமான கதைக்களன் கொண்ட நாவலை நான் பலஹீனமாக எழுதி வீணடித்து விட்டேன். சம்பவங்கள் யாரையும் சரியானபடி போய்ச் சேரவில்லை. சம்பவங்கள் வெறும் சம்பவங்களாகவே இருக்கின்றன. ஆனால், நாவலைப் படித்த வேறு சில நண்பர்கள் இது பெட்டியோவைவிட கனமான நாவல் என்கிறார்கள். அவர்கள் உலக இலக்கியம் பயின்றவர்கள். ஒருவர் எனக்குப் பிடித்த ...
Read more
Published on December 21, 2023 06:41