விஷ்ணுபுரம் விருது விழா – 2023
இரண்டாயிரத்து இருபத்து மூன்றாம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது விழா நிகழ்வு இந்த மாதம் பதினாறாம், பதினேழாம் திகதிகளில் கோவையில் நடைபெறுகிறது. நவீன இலக்கிய வாசகர்கள் தவற விடக்கூடாத நிகழ்வு. பெறுமதியான உரையாடல்களும் அறிமுகங்களும் இங்குதான் கிடைக்கும். பதினாறு காலை பத்து மணிமுதல் இலக்கிய அரங்கு தொடங்கும். விஷ்ணுபுரம் விருந்தினர்களான- எழுத்தாளர்கள் வாசகர்களைச் சந்திப்பார்கள். வாசகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பார்கள். இந்த உரையாடலில் கடந்த ஆண்டு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறேன். எழுத்தாளராகவும் இலக்கிய வாசகனாகவும் பெருமை கொள்ளக்கூடிய தருணமது. இம்முறை எனதருமை சகோதரர் எழுத்தாளர் வாசு முருகவேல் விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கும் வாழ்த்துக்கள். எழுத்துக்களை வாசித்து விட்டு கேள்விகளை கேட்கும் முன்னுதாரணமற்ற வாசகர்களை இங்குதான் காணமுடியும்.
பதினேழாம் திகதி மாலை ஐந்து முப்பது விருது விழா நடைபெறும். எனது ஆசான்களில் ஒருவரான யுவன் சந்திரசேகர் விருது பெறுகிறார். ஆதலால் இன்னும் கூடுதலான கொண்டாட்டமான விழாவாக அமைந்திருக்கிறது. சிறப்பு விருந்தினராக இந்திய வரலாற்றாளர் ராமச்சந்திர குகா கலந்து கொள்கிறார். அவருடைய இரண்டு புத்தங்களை வாசித்திருக்கிறேன். சிறந்த மதிப்புக்குரிய ஆய்வாளர். அவரோடு நிகழும் உரையாடலுக்காக காத்திருக்கிறேன்.
விஷ்ணுபுரம் இலக்கிய நிகழ்வில் சந்திக்கலாம். நன்றி.
The post விஷ்ணுபுரம் விருது விழா – 2023 first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

