இந்த நேரத்தில் இரண்டு பேரிடர்களையும் இரண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்களை அந்தந்தப் பேரிடர் காலத்து அவர்களது செயல்பாடுகளுக்காக நினைக்கவும் வணங்கவும் கடமைப் பட்டிருக்கிறோம்ஒரு பேரிடர் சுனாமிஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் சுனாமியின்போது நாகையின் அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவரான திரு ராதாகிருஷ்ணன்அப்போது சுனாமிக்கு தங்களது அனைத்துக் குழந்தைகளையும் சில தாய்மார்கள் பறிகொடுத்து இருந்தனர் அவர்களில் சிலர் குடும்பக் கட்டுப்பாடு அறுவை செய்திருந்தனர் அவர்களை அன்போடு அரவணைத்து ஆறுதல் சொன்னதோடு அவர்களுக்கு மறு அறுவை செய்து மீண்டும் அவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கச் செய்தவர் திரு ராதாகிருஷ்ணன்இப்போது தெந்தமிழ்நாட்டின் பேய்மழைப் பேரிடர்திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் தனது மாவட்டத்தில் மகப்பேற்றிற்காக காத்திருக்கும் தாய்மார்களை அடையாளம் கண்டுஅவர்களை இப்போதே மருத்துவ மனைகளில் சேர்த்து பாதுகாத்திருக்கிறார்இந்த இரண்டு செயல்களையும் நிர்வாக ரீதியாக குறிப்பிட வேண்டுமெனில் சிறப்பான பேரிடர் மேலாண்மை என்று குறிப்பிடலாம்ஆனால் இவை இரண்டு செயல்களும் எந்தப் பெயருக்குள்ளும் பொருந்தாத மேன்மையானவை
Published on December 18, 2023 16:56