Little Magazine Voices வங்காளத்திலுள்ள சிறுபத்திரிக்கைக் கலாச்சாரம் பற்றிய ஆவணப்படம். வங்காளத்தில் நிலவும் சிறுபத்திரிக்கைச் சூழல் அதன் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள். புத்தகக் கடைகள் பற்றிய இந்த ஆவணப்படம் சிறப்பாக உருவாக்கபட்டுள்ளது.
குறிப்பாக சமகால வங்காள இலக்கியம் மற்றும் அறிவுசார் பண்பாட்டின் முக்கியத்துவம் பற்றிப் பேசுகிறது .
தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு சிறுபத்திரிக்கைகள் ஆற்றிய பங்கு முக்கியமானது. மிகச்சிறந்த படைப்பாளிகள் சிறுபத்திரிக்கையிலிருந்து உருவானவர்களே. சிறந்த மொழிபெயர்ப்புகள். புனைகதைகள். கவிதைகளை சிறுபத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன. அதனை நடத்திய எழுத்தாளர்கள் நண்பர்களின் பொருளாதார உதவியோடு இதழை நடத்தி நஷ்டப்பட்டார்கள். ஆனால் அவர்களின் வழியே தான் இலக்கியத்தின் புதிய பாதை உருவாக்கபட்டது.
நான் எழுத வந்த காலத்தில் சிறுபத்திரிக்கைகள் தீவிரமாக செயல்பட்டு வந்தன. நானே அட்சரம் என்ற சிறுபத்திரிக்கையை நடத்தியிருக்கிறேன். இந்த ஆவணப்படம் அந்த நாட்களை நினைவுபடுத்தியது.
Published on October 14, 2023 00:33