அன்புள்ள சாரு, சில நாட்களாக இரவு ஆரம்பிக்கையிலே ஏதோ விபரீதமான எண்ணங்களும், மனிதர்களின் மேலுள்ள அபிமானமும் மாறிமாறி கேள்விகளாகத் துன்புறுத்திக் கொண்டே வந்தன. இப்படி இருக்கையில்தான் சில வாரங்களுக்கு முன்னர் தங்களுடைய ‘நான்தான் ஔரங்ஸேப்’ நாவலை வாசிக்கலாம் என்று எடுத்தேன். இதற்கு முன்னர் நான் படித்த உங்கள் எழுத்தில் இருந்து இது வேறு ஒன்றாக இருக்கிறது. உங்கள் பாணியில் சொல்ல வேண்டுமானால் முழுவதுமாக ரகளையான மொழிநடையில் மீறல் நிரம்ப பயணிக்காமல் ஔரங்ஸேப் பேசுவதில் இருந்தே மிகவும் அமைதியான ...
Read more
Published on October 11, 2023 21:08