இப்படியெல்லாம் வெறுக்க வேண்டிய அவசியமென்ன”

 


”இப்படியெல்லாம் வெறுக்க வேண்டிய அவசியமென்ன”என்று கேட்டிருக்கிறார் ஐரோம் ஷர்மிளாஇதனை,மக்களை நேசிக்க விடாமல் உங்களைத் தடுப்பதென்ன என்றும் கொள்ளலாம் என் அன்பிற்குரிய திரு நரேந்திரர்ஷர்மிளாவின் விரல்களில் ஒன்று என்னை நோக்கியும் நீள்வதை உணர்ந்திருக்கிறேன் அதனால்தான் இத்தனைக்குப் பிறகும் உங்களை அன்பிற்குரியவர் என்று என்னால் விளிக்க முடிகிறதுஎன்னதான் ஆயிற்று உங்களுக்கு? என்றெல்லாம் கேட்கிற அளவிற்கு கிறுக்கெல்லாம் இல்லை நான்நீங்கள் அப்படித்தான்ஆனாலும் எங்களுக்கு இரண்டு இருக்கிறதுமக்களளைச் சந்திப்பது என்பது ஒன்றுமுடியுமால் உங்களை அசைக்கவைத்து செத்துக்கொண்டிருக்கிற மக்களின் எண்ணிக்கையை குறைக்க முயற்சிப்பது என்பது இரண்டுபோகிற இடமெல்லாம் குறளைச் சொல்கிறீர்கள்குறள் மீது கொஞ்சமேனும் உங்களுக்கு மரியாதை இருக்குமானால் தயவு செய்து 541 வது குறளையும்அதற்கான சாலமன் பாப்பையாவின் விளக்கத்தையும் வாசியுங்கள்“ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்தேர்ந்து செய்வதே முறை”இது அந்தக் குறள்”குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு வெறுப்பு இல்லாது,நடு நிலையோடு,நூல்வழி ஆராய்ந்து,குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதேநேர்மையான ஆட்சி”இது அந்தக் குறளுக்கு பாப்பையா தரும் விளக்கம்பாப்பையா உங்களுக்க வேண்டப்படாதவரும் அல்லமணிப்பூர் கலவரம் குறித்து ஆராய்ந்து குற்றவாளிகளைத் தண்டியுங்கள்அவர்கள் நமது வாக்குகள் என்று தவறினீர்கள் எனில்காலம் மக்களை சரியாக வழிநடத்தும்#மணிப்பூர்வடகிழக்குஇந்தியாநரேந்திரர்#சாமங்கவிய ஒன்றரைமணி26.07.2023
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 26, 2023 10:05
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.