மலேசியாவின் இலக்கியம் மற்றும் பண்பாட்டின் குரலாக இன்று திகழும் முதன்மையான ஊடகம் வல்லினம் இணைய இதழ். பொதுவாக தமிழ் ஊடகங்களில் இருக்கும் மிகையும் பாவனைகளும் இல்லாத விமர்சனப்பார்வை கொண்டது. இலக்கியம் மற்றும் கலை சார்ந்த பார்வையும் துல்லியமானது. வல்லினம் இன்று இந்தியத் தமிழிலக்கியத்திற்கும் மலேசியத் தமிழிலக்கியத்திற்கும் இடையேயான ஓர் உரையாடலாகவே நிகழ்கிறது.
வல்லினம் மே 2023 இதழில் உமா பதிப்பகத்தின் உலகத்தமிழ்க் களஞ்சியம் பற்றிய அ.பாண்டியனின் கறாரான விமர்சனம் தெளிவான அறிவியக்க அளவுகோல் கொண்டது. சிங்கப்பூரின் மூன்று அண்மைக்கால படைப்புகள் பற்றி லதா எழுதியுள்ளார். சு.வேணு கோபால், கலைச்செல்வி, இராஜேஷ் ராமசாமி, அர்வின்குமார்,ஐ.கிருத்திகா, விஜயகுமார், சியாமளா கோபு ஆகியோரின் கதைகள் உள்ளன.
வல்லினம் இணைய இதழ்
Published on May 06, 2023 11:33