செல்வி திரிக்ஷா சரவணின் பூப்புனித நீராட்டு விழா தாஜ்மஹால் மண்டபத்தில் தடபுடலாக நிகழ்ந்துகொண்டிருந்தது.
வாசலில் பாவை விளக்குகள்போல அலங்கரித்து நின்ற இளம்பெண்கள், வந்தவர்களைக் கற்கண்டு கொடுத்தும் பன்னீர் தெளித்தும் வரவேற்றுக்கொண்டிருந்தார்கள். மின்வெட்டு நேரமாகையால் வாசலுக்கருகே ஒரு ஜெனரேட்டர் இரைந்துகொண்டிருந்தது. மண்டபத்தின் உள்ளே குளிரூட்டி நிறுத்தப்பட்டு வலுக்குறைந்த மின்சாரத்தில் மின் குமிழ்களும் விசிறிகளும் தூங்கி வழிந்தன. வந்தவர்களின் பலவித பெர்பியூமுகளுடன் அவர்களின் வியர்வையும் கலந்து புதி...
Published on April 23, 2023 17:16