சிவகடாட்சம் சிவபதமடைந்திருந்தார்.
வழமைபோல, இரத்தம் சுத்தமாகத் துடைக்கப்பட்டு, கழுத்திலும் நெஞ்சிலும் காயங்களுக்குக் கட்டுப்போடப்பட்டிருந்தன. பட்டு வேட்டி கட்டி, வெற்று மேலில் இரட்டை வடச் சங்கிலியும் கைச்செயினும் அணிந்து, செத்துச் சில மணி நேரங்கள் கழிந்தும் சிவகடாட்சம் செகச்சோதியாக இன்னமும் மின்னிக்கொண்டிருந்தார். வேட்டி நழுவா வண்ணம் இடுப்பில் வெள்ளை நிறத்தில் பெல்ட் கட்டியிருந்தார். மேலே அவர் அணிய இருந்த விதம் விதமான சரிகை ஜிப்பாக்கள் அயர்ன் செய்யப்பட்டு, கட்டிலில் விரித்து வைக்கப்பட்டிருந்தன. எ...
Published on April 23, 2023 17:24