தமிழ்ப் பிரபாவின் கோசலை படித்தேன்.
சமீபத்தில் படித்த மிகச்சிறந்த நாவல் இதுவென்பேன்.

தமிழ்ப்பிரபாவின் பேட்டை நாவலின் வெளியீட்டுவிழாவில் நான் கலந்து கொண்டு பாராட்டி பேசினேன். அப்போதே அவரது எழுத்து திறமையும் தனித்துவமும் முக்கியமானது என்று குறிப்பிட்டேன். இந்த நாவல் அவரது அடுத்தக் கட்ட நகர்வை அடையாளம் காட்டுகிறது. தமிழ் இலக்கியப்பரப்பில் மறக்க முடியாத பெண் கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் கோசலை இடம் பெறுகிறாள். உறவுகளால் கைவிடப்படும் அவள் தனக்கான வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறாள். சமூகப் போராளியாகிறாள். அவளது வாழ்க்கை நம் முன்னே திரைப்படம் போல விரிகிறது. நாவலின் வழியே சிந்தாதிரி பேட்டையின் வாழ்க்கை சித்திரம் அபூர்வமாக வெளிப்படுகிறது.
தமிழ்ப் பிரபாவிற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்
Published on March 06, 2023 21:16