குருகு இணையதளம்
வணக்கம் ஜெ.நண்பர்கள் தாமரைக்கண்ணன்களுடன் இணைந்து கலை வரலாறு தத்துவத்திற்கான ஒரு தளம் ஆரம்பிக்கலாம் என்று இரு மாதங்களாக பேசி வடிவமைத்து நாளை வெளியிடலாம் என்று நினைத்துள்ளோம். உங்களிடம் தனியாக இருக்கும் சமயம் அதற்கான அனுமதியும் ஆலோசனையும் கேட்கலாம் என்று இருந்தேன். ஆனால் அதற்கான சமயம் அமையாமலே இருந்து வந்தது. நாங்களும் நம் வட்ட நண்பரகளிடம் ஆலோசனைகள் கேட்டு வடிவமைத்துள்ளோம்.
இந்த தளத்தை வலைப்பூவின் சுதந்திரத்துடனும் பத்திரிகையின் நெறியுடனும் அமைத்துக்கொள்ளலாம் என்று எண்ணியுள்ளோம். எந்த விதமான எதிர்மனநிலையுடனும் இத்தளத்தை நடத்தக்கூடாது என்று நினைக்கிறோம். செயலை மட்டுமே முன் வைக்கவேண்டும் என்பது நோக்கம். அதனால் ஓர் எடையற்ற பெயரை வைக்கலாம் என்று ஆலோசித்து குருகு என்று வைத்துள்ளோம். என்றும் தந்தை என தங்கள் ஆசியும் வழிகாட்டலும் உடன் இருந்து எங்களை வழிநடத்தும்
அனங்கன்
Published on January 25, 2023 10:31