இதுவரை என் வாழ்வில் என் புத்தகத்தை யாரிடமும் கொடுத்துப் படிக்கச் சொன்னதில்லை. திமிர் மட்டுமே காரணம். என் ஆசான் அசோகமித்திரனிடம் கூட என்னுடைய ஒரு புத்தகத்தையும் கொடுத்ததில்லை. அவரை மாதம் ஒருமுறை சந்திக்கும் வழக்கம் உள்ளவன். ஆனால் புத்தகம் கொடுத்ததில்லை. ஆனால் அன்பு நாவலை உங்கள் ஒவ்வொருவரிடமும் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொல்லி இறைஞ்சுவேன். கைகூப்பி வணங்கி உங்களைப் படிக்கச் சொல்லுவேன். படிக்கச் சொல்லி யாசிப்பேன். ஏன் அப்படிச் சொல்கிறேன் என்று நீங்கள் அதைப் படிக்கும் போது ...
Read more
Published on January 14, 2023 08:48