கடவுளோடு பரிச்சயம் உள்ளவரிடம் மட்டும் கேட்கிறேன் நாத்திக வாதிகள் தலையிட வேண்டாம் கடவுள் நரமாமிசப் பட்சிணியா என் இல்லம் வந்த கடவுள் இன்றென்ன செய்தார் தெரியுமா தன்னிரு கைகளாலும் என் கரமொன்றைப் பற்றிக் கொண்டார் கொஞ்சமும் சலிப்பின்றி அரைமணி நேரம் தின்று கொண்டேயிருந்தார் பற்றியயென் கரத்தை நல்லவேளை பொக்கைவாயென்பதால் தப்பினேன் இல்லாவிட்டால் கை போயிருக்கும்
Published on November 16, 2022 02:05