மூன்று நாட்களாக சாமிக்குப் பூ போடவில்லை என்றாள் பத்தினி சாமியைத்தான் தினமும் குளிப்பாட்டுகிறாய் சாம்பிராணி போடுகிறாய் சாம்பிராணி போடுவதற்காக கொட்டாங்கச்சியைத் தகதகவென தகிக்க வைக்கிறாய் சாமிக்குப் பாலூட்டுகிறாய் மலஜலம் நீக்கி சுத்தம் செய்கிறாய் தூங்க வைக்கிறாய் திருஷ்டி சுற்றிப் போடுகிறாய் சாமி அழுதால் அனிருத்தின் Wasted போட்டு சாமியைக் குதியாட்டம் போட வைக்கிறாய் அஞ்சு மாச சாமி வந்து உன் மனசைப் பஞ்சாக்கிய பின்னும் பூ வேறு போடணுமா கண்ணே?
Published on November 15, 2022 23:00