தத்துவ அறிமுக வகுப்புகள், அறிவிப்பு
வரும் அக்டோபர் 14 ,15 16 (வெள்ளி ,சனி, ஞாயிறு) நாட்களில் நடத்தவிருக்கும் தத்துவ அறிமுக வகுப்புகளுக்கான அறிவிப்பு சென்ற சனியன்று வெளியாகியது. காலை 730க்குள் தேவையான எண்ணிக்கையில் வருகையாளர் பதிவு செய்துகொண்டமையால் பதிவு நீக்கப்பட்டது.
ஆனால் இதுவரை விஷ்ணுபுரம் வகுப்புகளில் நிகழாத விஷயம் பதிவுசெய்தவர்களில் பலர் பணம்கட்டாமல், செய்தியும் தெரிவிக்காமல் இருந்துவிட்டமை. இச்செயல் இத்தகைய நிகழ்ச்சிகளைச் சீர்குலைப்பது. பதிவுசெய்துவிட்டு, முடிந்தால் செல்லலாம் என நினைக்கிறார்கள். இது ஆர்வமுடன் வர எண்ணுபவர்களின் வாய்ப்பை அழிக்கிறது. ஒருங்கிணைக்கும் எங்களுக்கு பொருளியல் இழப்பை உருவாக்குகிறது.
அவ்வாறு பணம்கட்டாதவர்களின் பட்டியலில் இருப்பவர்களுக்கு செய்தி அனுப்பப்பட்டுவிட்டது. அவர்கள் இனி விஷ்ணுபுரம் முகாம்களில் கலந்துகொள்ளவேண்டியதில்லை. தனிப்பட்ட முறையில் என்னுடன் தொடர்பும் கொள்ளவேண்டியதில்லை. நான் என் வாழ்நாளில் தாங்கள் செய்யும் செயல்களுக்கு முழுப்பொறுப்பு எடுப்பவர்களுடன் மட்டுமே தொடர்பு கொள்ள விரும்புகிறேன். மற்றவர்கள் என் செயல்களுக்கு பெரும் தடைகள். என் கனவுகளும் இலக்குகளும் மிகப்பெரியவை.
இந்த அறிவிப்பில் புதிய சிலரை சேர்த்துக் கொள்வதாகச் சொல்லியிருந்தேன். மீண்டும் இடங்கள் நிறைந்துவிட்டன.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

