[image error]
1986ல் பள்ளிகொண்டபுரம் நாவலை எனக்கு அளித்தபோது நான் நிமிர்ந்து பார்த்து சுந்தர ராமசாமியிடம் “என்ன ஒரு தயாரிப்பு…ரஷ்யன் கிளாஸிக்ஸ் மாதிரி” என்றேன். “அதைச் சொல்றீங்களான்னு கவனிச்சிட்டிருக்கேன்” என்று சிரித்தவர் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி பற்றிச் சொன்னார். தமிழின் முதல் பெண் பதிப்பாளர்.
மறைந்த அரசியலாளர் சத்தியமூர்த்தியின் மகள். சுதந்திரத்திற்கு முந்தைய தலைவர். ஆகவே கோடீஸ்வரர் அல்ல. லட்சுமி கிருஷ்ணமூர்த்திக்கு அந்த கோடிகள் இருந்திருந்தால் தமிழ் பதிப்புலகத்தையே மாற்றியிருப்பார்.
லட்சுமி கிருஷ்ணமூர்த்தி
லட்சுமி கிருஷ்ணமூர்த்தி – தமிழ் விக்கி
Published on October 08, 2022 11:33