அன்பின் சார்,
வணக்கம்இந்தியப் பொது உடமைக் கட்சியின் கேரள மாநாட்டு உரையினை சிலிர்ப்போடு கேட்டேன்உங்கள் கைகளைப் பற்றிக் கொள்கிறேன்ஒன்றிய அரசின் கல்விக் கொள்கை குறித்தும் அதற்கு எதிராட வேண்டிய அவசியம் குறித்துமான உங்கள் உரையின் பகுதியை இரண்டு மூன்றுமுறை கேட்டேன்“புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்” நமது பள்ளிக் கல்வித் துறையாலும் நடத்தப்பட இருப்பதாக அறிகிறேன்இந்தப் பெயரே “திணிப்பு” தானே சார்ஏற்கனவே எழுத்தறிவில்லாத முதியவர்களுக்கான பள்ளி சாரா மற்றும் முதியோர் கல்வியெல்லாம் நம்மிடம் உண்டே சார்60 விழுக்காடு நாம் கொடுத்து பாரதம் என்பதை ஏற்க வேண்டுமா?போக ஒன்றிய அரசு என்றே விளிக்க வேண்டும் என்பதை அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் சொல்லுங்கள்கல்வி உங்கள் ஆட்சியிலும் மையப்படுகிறது என்பதையும் சனாதனத்தின் பக்கம் சாய்வதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கிறேன்அன்புடன்,இரா.எட்வின்03.10.2022
Published on October 05, 2022 03:29