ஒருமுறைஅண்ணன் எஸ்.அறிவுமணி எழுதினார்“தாயே தாலாட்டை நிறுத்துபசிக்கிறபோது எப்படித் தூங்குவது?தந்தையே அறிவுரையை நிறுத்துபசிக்கிறபோதுஎப்படிக் கேட்பது?ஆசானே பாடத்தை நிறுத்துபசிக்கிறபோதுஎப்படிப் படிப்பது?எல்லோரும் எல்லாவற்றையும் நிறுத்துங்கள்முதலில் என் பசிக்கு பதில் சொல்லுங்கள் ”நினைவில் வைத்து எழுதியதுகொஞ்சம் அப்படி இப்படி இருக்கலாம்காலையில் பட்டினியோடு பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்அதற்கான காரணங்களும் அதிகம்கூட்டுவழிபாட்டுக் கூட்டத்தில் நிற்கமுடியாமல் சரியும் குழந்தைகளின் எண்ணிக்கை சொல்லி மாளாதுகாரணங்களைக் கண்டடைந்து களைவது மக்களரசின் இலக்குகாலை உணவு என்பது இடைக்கால நிவாரணம்ஆமாம்,பசிக்கிறபோது எப்படிப் படிப்பான்?கைப்பற்றிக் கொள்கிறேன் ஸ்டாலின் சார்இதை மேல்நிலைப் பள்ளிவரை விரிவு செய்யுங்கள்சத்துணவின் ஒரு பகுதி ஆக்குங்கள்ஊழியர்களது சம்பளத்தை நியாயமான அளவில் உயர்த்துங்கள்
Published on September 15, 2022 08:47