இது எமது வேலை
இது எங்கள் வேலை
********************** பெரும்பான்மை ஊர்களில் உள்ளது போலவே திருவள்ளூர் மாவட்டம் தோக்காமூர் கிராமத்திலும் பட்டியலின மக்களுக்கான காலனி இருக்கிறதுஅங்கு வாழும் மக்களுக்கு எந்தவிதமான சொத்தும் இல்லைL வடிவிலான அந்தக் காலனியில் இருந்த இடமும் அவர்களுக்குப் போதாததாக இருந்திருக்கிறதுகுடும்பங்கள் வளர வளர இது தவிர்க்க இயலாததாக மாறுவதும் இயற்கைசொந்தமாக மனை வாங்கி வீடு கட்டுவதற்கு வசதி இல்லைவசதியே இருந்தாலும் குடியானத் தெருவில் இவர்களால் மனையும் வாங்க இயலாதுஎனவே பக்கத்தில் இருந்த பொறம்போக்கு நிலம் என்று இவர்கள் கருதிய நிலத்தில் சிலர் கொட்டகை அமைத்து தங்கியுள்ளனர்அது அந்தப் பகுதியின் ஆதிக்க சாதியினரை எரிச்சல்பட வைத்திருக்கிறது2015 இல் அவர்கள் அது திரௌபதை அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் என்றும்அதை பட்டியல் இனத்தவர் பயன்படுத்தக்கூடாது என்றும் கூறி கொட்டகைகளை பிரித்து எறிந்திருக்கின்றனர்கோயில் நிலத்திற்குள் பட்டியல் இனத்தவர் நுழையக்கூடாது என்பதற்காக 10 அடி உயரத்திற்கு 90 மீட்டர் நீளத்தில் தடுப்புச் சுவர் கட்டிவிட்டனர்இது கேள்விபட்டுதீண்டாமை ஒழிப்பு முன்னணியும் CPM கட்சியும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடுவட்டாட்சியரையும் சந்திக்கின்றனர்கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவர் தீண்டாமைச் சுவர்தான் என்றும் அது இடிக்கப்பட வேண்டும் என்றும் மனு கொடுக்கின்றனர்தொடர்ந்து போராடவும் செய்கின்றனர்CPM கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலியும் சின்னத்துரையும் தொடர்ந்து மக்களை சந்திப்பதும் அதிகாரிகளை சந்திப்பதுமாக இருக்கின்றனர் 2022 மே மாதத்தில் திருவள்ளூரில் ஒரு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடக்கிறதுதோழர் G.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்துகிறார்அதனைத் தொடர்ந்து CPM மாநிலச் செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கடிதம் எழுதுகிறார்தோக்கமூர் தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட வேண்டும் என்றும்இல்லையெனில் அக்டோபர் 06 ஆம் தேதியன்று ஒரு பெரும் போராட்டத்திற்கான தேதியை குறிக்க நேரிடும் என்றும் கூறுகிறார்முதல்வரின் கவனத்திற்கு இந்தக் கடிதம் போனதும்0310.2022 அன்று அதிகாலை பலத்த போலிஸ் பாதுகாப்போடு தோக்காமூர் தீண்டாமைச் சுவர் இடிக்கப் படுகிறதுஆனாலும் காலனி மக்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள சிமெண்ட் போஸ்ட்களை அகற்ற வேண்டும்அந்த மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்அச்சம் நீங்கும்வரை போலிஸ் பாதுகாப்பு தரவேண்டும்என்ற கோரிக்கைகள் மிச்சம் இருப்பதாகவும்தொடர்ந்து களத்தில் அதற்காக கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நிற்கும் என்றும் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் தோழர் கோபால் கூறியுள்ளதாக 04.10.2022 தீக்கதிர் கூறுகிறதுதீக்கதிர் தவிர எத்தனைப் பத்திரிக்கைகள் இந்த செய்தியை உள்ளபடி பிரசுரித்துள்ளன என்று தெரியவில்லைஇது நமது வேலைதொடர்ந்து செய்வோம்#சாமங்கவிய ஒரு மணி 43 நிமிடங்கள்04.10.2022
Published on October 05, 2022 03:33
No comments have been added yet.
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)