யார் காங்கிரசின் தலைவர் என்பது காங்கிரசின் வேலை
காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நடக்க இருக்கிறது
தேர்தலில் போட்டியும் இருக்கிறதுபோட்டியில் திரு மல்லிகார்ஜுனே அவர்களும் போட்டியிடுகிறார்இதுவெல்லாம் அவர்களது உட்கட்சி விஷயங்கள்இந்த நிலை காங்கிரஸ் கட்சியில் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடும்அந்த வகையில் காங்கிரஸ் உத்வேகம் பெறுவது இந்த நாட்டுக்கும் நல்லதேதேர்தலில் போட்டி இருக்கிறது என்ற வகையில் போட்டியாளர்கள்ஏன் தான் வெற்றிபெற வேண்டும் என்றும்ஏன் தன்னை எதிர்த்து போட்டி இடுபவர் தோல்வி அடைய வேண்டும் என்றும் கட்சி வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்வது இயல்பானதுஅவர் யார், இவர் யார்யார் கட்சிக்குத் தேவை என்று அந்தக் கட்சியனர் கூடி விவாதிப்பதும் புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றுகாங்கிரஸ் கட்சிக்கு தலைவராக யார் வந்தால் நமக்கு வசதி என்று மற்ற கட்சிகள் குறிப்பாக பாஜக எதிர்பார்ப்பதையும் புரிந்துகொள்ள முடியும்யார் காங்கிரசின் தலைவராக வரவேண்டும் என்று கார்பரேட் முதலாளிகள் விரும்புவதும் இயல்புதான்யார் வந்தால் பாஜக மதவெறி பாசிச எதிர்ப்பு வலுப்படும் என்ற கணக்கை பொதுமக்கள் போடுவதும் ஏற்கக்கூடியதுதான்இந்தி எழுத்தாளர் ஆதேஜ் ராவல் காங்கிரஸ் கட்சியின் தேர்தலில் திரு மல்லிகார்ஜுனே போட்டியிடுவது குறித்து எழுத வரும்போது”கருப்புக் குதிரையைவிட கருப்பானவர் காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுகிறார்”என்று எழுதி உள்ளதைக் கண்டித்து ஆசிரியர் வீரமணி 02.10.2022 விடுதலையில் எழுதி உள்ளார்பிரச்சினை எழுந்ததும்குதிரை பேரம் நடக்கிறது,கருப்பு பணம் விளையாடுகிறதுஅதைப் பற்றிதான் எழுதினேன் என்று சமாளிக்க முயன்று அம்பலப்பட்டு நிற்கிறார்நானொன்றும் காங்கிரஸ்காரன் அல்ல ஆனாலும் அதேஜ் ராவலின் குரல் சனாதனத்தின் குரல்காங்கிரசில் யார் வரவேண்டும் என்பதற்கு இவருக்கு காரணம் இருக்கலாம்அதுகுறித்து எழுதலாம்ஆனால் மல்லிகார்ஜுனே கருப்பு நிறத்தவர்ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர்ஆகவே அதை இவர் கிண்டல் செய்வார் என்றால்காங்கிரசிற்கு உயர்சாதியை சார்ந்தவர், வெள்ளை நிறத்தவர்தான் வரவேண்டும் என்ற இவரது சனாதனப் புத்தி முந்திரிக்கொட்டையைவிட வேகமாக முன்னுக்கு வந்து நிற்கிறதுஇவர் கருப்பு நிறத்தவர்ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பது மட்டுமல்லஅவர் சனாதனத்திற்கு எதிராகவும் மதச்சார்பின்மைக்கு ஆதரவாகவும் தொடர்ந்து பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுப்பவர்அதில் இரண்டு சம்பவங்களையும் ஆசிரியர் தருகிறார்27.11.2015 அன்று பாராளுமன்றத்தில் மதச்சார்பின்மை, சமதர்மம்” ஆகியவை அம்பேத்கார் அறியாதவை என்றும்அரசமைப்பு சட்டத்தின் 42 வது திருத்தமாக அவை சேர்க்கப்பட்டதாகவும் ஆகவே ”மதச்சார்பின்மை” என்ற வார்த்தையையே ஒழிக்க வேண்டும் என்று ராஜ்நாத்சிங் பேசியவுடன் எழுந்த மல்லிகார்ஜுனேஅந்த இரண்டு வார்த்தைகளும் அம்பேத்கார் கொண்டுவர நினைத்த வார்த்தைகள் என்றும் அவர்கள் தடுத்துவிட்டதாகவும் கூறியதோடு நில்லாமல்“நீங்கள் ஆரியர்கள், வேறு நாடுகளில் இருந்து வந்தவர்கள்நாங்கள் 5000 ஆண்டுகளாக இங்கு வசிக்கிறோம். பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறோம். ஆனாலும் இங்குதான் வசிப்போம்”என்றும் கூறுகிறார்நான் ஆரியன் அல்ல, இந்த மண்ணின் மகன்” என்று மல்லிகார்ஜுனே பேசியதுதான் அவர்களின் கோவத்திற்கு காரணம்மல்லிகார்ஜுனே ஆரியன் அல்லஅவர் ஒடுக்கப்பட்ட பிரிவை சேர்ந்தவர்அதுமட்டும் அல்லஅவர் அதை உணர்ந்தவராகவும் அதற்கு எதிராடுபவராகவும் இருக்கிறார்ஆகவே அவர் காங்கிரசின் தலைவராகக் கூடாது என்று காங்கிரசிற்கு வெளியே இருக்கும் ஆரியர்கள் கத்துகிறார்கள்யார் காங்கிரசின் தலைவர் என்பது காங்கிரசின் வேலைமல்லிகார்ஜுனே வெற்றி பெறலாம்தோற்கலாம்தோற்றால்அது இந்தக் காரணத்தினால் என்று இருக்கக் கூடாதுஅவ்வளவுதான்#சாமங்கவிய 50 நிமிடங்கள்03.10.2022
Published on October 05, 2022 03:37
No comments have been added yet.
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)