விஷ்ணுபுரம் விருது,2022
சாரு நிவேதிதா – தமிழ் விக்கி
நாற்பதாண்டுகளாகத் தமிழிலக்கியத்தில் டிரான்ஸ்கிரஸ்ஸிவ் இலக்கிய வகைமையில் தனித்து நடந்து கொண்டிருப்பவர் என்று சாருநிவேதிதாவைச் சொல்லலாம். அவருடையை சிந்தனையையும் இயல்பையும் கொண்ட ஃப்ரெஞ்சு கலையுலகின் மீது அவர் ஆர்வம் கொள்வது இயல்பான ஒன்று. ஒரு காலகட்டத்தில் அவர் தன்னுடைய சிந்தனை மரபிற்கும் ஃப்ரெஞ்சுப் படைப்புலகிற்கும் இருந்த ஒப்புமைகளை வலியுறுத்தத் தொடர்ச்சியாக ஃப்ரெஞ்ச் இலக்கியங்களை, தத்துவங்களை, சினிமாக்களைப் பற்றி எழுதினார். அப்படியாக வந்த நூல்களில் மிக முக்கியமான ஆக்கம் ‘தாந்தேயின் சிறுத்தை’. பிற்பாடு ஃப்ரெஞ்ச் சிந்தனை உலகைப் பற்றிய அவரது தொகை நூல் மெதுஸாவின் மதுக்கோப்பை வெளியானது. பல வகைகளில் தமிழுக்கு மிக முக்கியமான ஆக்கம் இந்நூல்.
ஜான் பால் சாரு
Published on September 11, 2022 11:33